Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த உதயகலா என்னும் பெண்ணும் மற்றும் லண்டனில் சர்வதேச தமிழ் மாணவர் ஒண்றியம்(ITSO) நடத்தி வந்த ரிஷியுமாகச் சேர்ந்து பெருந்தொகையான மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இதற்காக பலரிடம் பணம் திரட்டப்பட்டுள்ளதோடு ஊரில் உள்ள பல போராளிகளின் குடும்பங்களிடமும் பணம் பெறப்பட்டுள்ளது. குறிப்பாச் சொல்லப்போனால் ஊரில் உள்ள ஏரியா வசூலை உதயகலா கவனிக்க... லண்டன் ஏரியா வசூலை ITSO தலைவர் ரிஷி கவனித்துள்ளார். கிளிநொச்சியில் கஷ்டப்பட்ட மாணவிகளை சில முஸ்லீம்கள் மிரட்டி அவர்களை நீலப்படங்களில்( செக்ஸ் படங்களில்) நடிக்க வைப்பதாகக் கூறி ரிஷி என்பவர் பலரிடம் லண்டனில் பணம் கறந்துள்ளார். இவர் காட்டிய 70MM பயாஸ்கோப் படக் கதையைக் கேட்டு சிலர் கண்ணீர் வடித்து ஏமாந்துள்ளனர். இவர் ஊரில் கூட்டுச் சேர்ந்த ஆளின் பெயர் தான் உதயகலா! அடுத்த ஒண்ணாம் நம்பர் பிராடு!

முஸ்லீம் சகோதரர்களையும் தமிழர்களையும் அடிபடவிடவேண்டும்... சேம் ரைமில் காசும் கறக்கவேண்டும்! சிங்களப் புலனாய்வுப் பிரிவால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட நபரே இந்த ரிஷி எனச் சிலர் கூறிவந்தபோது அதனை எவரும் நம்பத் தயார் இல்லை. ஆனால் இன்று நிலை எல்லை மீறிச் சென்றுள்ளபோது வயிற்றில் அடித்து அழுவதால் என்ன பயன்?

உதயகலா வட்டக்கச்சியில் இருந்தவேளை போராளி ஒருவரை மணம் முடித்துள்ளார். பின்னர் அப்போராளி கயப்பட்டதால் அவர் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதனிடையே வன்னி ரெக்கில் கம்பீயூட்டர் பயிலச் சென்ற உதயகலாவுக்கும் அங்கே ஆசிரியராக இருந்த தயாபராஜ்(தயாபரன்) க்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது. மக்களே உங்களுக்கு நினைவிருக்கலாம். வன்னி ரெக்கில் வேலைபார்த்த தயாபரன் என்பவரை இலங்கை இராணுவம் கொன்றுவிட்டது என்ற செய்தி 2009ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் வெளியாகியது. இவை அனைத்துமே ஒரு செட்டப் தான் ! ஆனால் உதயகலாவும் தயாபரனும் இந்தியா சென்று அங்கே வாழ்ந்து வந்துள்ளனர். கிளிநொச்சொயில் இவர்கள் இருந்த காலகட்டத்தில் தயாபரன் என்பவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் நெருக்கமாக இருந்ததைப் பயன்படுத்தி பல ஏமாற்றுச் சம்பவங்கள் நடந்துள்ளது. ஊனமுற்ற போராளிகளை வெளிநாடு அனுப்புவதாகப் பணம் பறிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற சில போராளிகளை தாம் வெளியே எடுத்துவிடுவதாகக் கூறி உதயகலாவும் தயாபரனும் சேர்ந்து பலரிடம் கோடிக்கணக்கான பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளனர். தமது பிள்ளைகள் வெளியே வருவார்கள் என நம்பி பல குடும்பத்தினர் தமது வீடுவாசல்களை விற்று சிலர் தமது நகை நட்டுகளை விற்று இன்னும் சிலர் தமது சொந்த சேமிப்புகளைக் கூட இவர்களிடம் கொடுத்து ஏமாந்து செய்வதறியாது தவிக்கின்றனர்.

ஊரில் உதயகலாவும் தயாபரனும் லண்டனில் சர்வதேச மாணவர் ஒன்றியம்(ITSO) என்ற போர்வையில் ரிஷியும் சேர்ந்து கூட்டாகக் கொள்ளையடித்துள்ளனர். லண்டனில் கொள்ளையடிப்பது எனக்கு ஆனால் ஊரில் இருந்து படங்களை அனுப்பவேண்டும் என ரிஷி கூறியுள்ளார். அதாவது குழந்தைகளுக்கும் மாணவ மாணவியருக்கும் ஊரில் உதவுவது போல பல போலியான படங்களை எடுத்து அதனை லண்டனில் காட்டியுள்ளார் ரிஷி. 2009ம் ஆண்டு போர் நிறைவுற்ற பின்னர் லண்டனுக்கு மாணவர் விசாவில் வந்த ரிஷி என்னும் நபர் பதிவுசெய்யப்பட்ட கம்பெனி ஒன்றை லண்டனில் திறந்துள்ளார். அவர் அதனை எவ்வாறு திறக்க முடியும் ? மாணவர் விசாவில் வரும் எவரும் 20 மணித்தியாலங்களுக்கு மேல் வேலைசெய்யவும் முடியாது மற்றும் வணிகத்தில் ஈடுபட முடியாது என்பது பிரித்தானிய குடிவரவுச் சட்டமாகும். இதனைக் கூடக் கவனிக்காமல் பலர் அவருக்கு உதவிசெய்துள்ளனர். காரணம் அவர் தேன் ஒழுகும் பேச்சு மட்டும்தான்!

லண்டன் வந்து சில மாதங்களில் அவர் இங்குள்ள பல அமைப்புகளுடன் சர்வசாதாரணமாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். THO என்று அழைக்கப்படும் தமிழர் சுகாதார அமைப்பு, பின்னர் ரி.ஆர்.ஓ , அதன் பின்னர் நம்பிக்கை ஒளி என பல தர்மஸ்தாபனங்களுடனும் அதன் தலைவர்களுடனும் அவர் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டார். இதனூடாக அவர் பணத்தைப் பெற்று ஊருக்கு அனுப்புவதாக நாடகமாடியும் உள்ளார். தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அதிர்வு இணையம் அறிகிறது. உதயகலாவைப் பொறுத்தவரை அவர் ஊரில் தொடர்ந்தும் பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறார். ஊனமுற்ற போராளிகளை, குழந்தைகள் பராமரிப்பை, மாணவிகளை பராமரிப்பது என பல விடையங்களை மக்களுக்குச் சொல்லி அதனூடாக அவர் பணத்தைக் கறந்து வருகிறார்.

எம் உறவுகளே! இவர்களை நீங்கள் இனங்கானுவது அவசியமாகும். எத்தனையோ நல்ல தர்மஸ்தாபனங்கள் இருக்கும்போது இவர்களிடம் போய் ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்? மற்றும் லண்டனில் இருந்து இயங்கிவரும் தமிழ் அமைப்புகள் இவர்கள் போன்றவர்களுக்கு ஏன் பணத்தைக் கொடுக்கவேண்டும்? பின்னர் தான் சொல்கிறார்கள் எமக்குத் தெரியும் இவர் ஒரு கள்ளன் என்று... அப்படி என்றால் முதல் இடத்திலேயே வடிவாக விசாரிக்காமல் ஏன் செயல்படவேண்டும் ? அதுமட்டுமா தனி மனிதர்களும் செல்வந்தர்கள் மற்றும் டாக்டர்களும் இந்த ரிஷியிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்துபோயுள்ளதாகப் புலம்புகின்றனர். ரிஷியிடம் கொடுக்கப்பட்ட காசுக்கு அவர் எல்லோர் நெற்றியிலும் போட்டிருப்பது நாமம் தான்!

இவ்வாறு பெருந்தொகையான பணத்தை கையாடல் செய்த குற்றத்திற்காவும் மக்களை ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காகவும் உதயகலாவையும் தயாபரனையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர்கள் இருவரும் தற்போது மலேசியாவில் தங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்களுக்கு சர்வதேசப் பொலிசார்(இன்ரர் போல்) பிடியானை பிறப்பிக்க இலங்கையில் உள்ள யாராவது ஒரு சட்டத்தரணி முன்வருவாரா ? இல்லை தமிழர்களின் நலன்களுக்காக தாம் செயல்படுகிறோம் எனக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்விடையத்தில் தலையிட்டு தமது தரப்பினூடாக ஒரு சட்டத்தரணியை நியமிக்குமா ? பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளின் குடும்பங்களுக்கும் இவர்கள் இதனைச் செய்வார்களா?

உடல் ஊனமுற்ற பல போராளிகளும் சில பொதுமக்களும் இவர்களால் ஏமாற்றப்பட்டு நிர்கதியான நிலையில் ஒரு இடத்தில் இருப்பதாகவும் நாம் அறிகிறோம். இவர்களுக்கு யார் உதவிசெய்வார்கள்? மற்றும் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாவில் வந்து கம்பெனி ஒன்றை ஆரம்பித்து காசு சேர்த்து ஏமாற்றிய ரிஷி மீதும் லண்டன் பொலிசில் வழக்கு தொடரப்படவேண்டும். இதனை தமிழர்கள் செய்யும் பட்சத்திலேயே இனி வருங்காலங்களில் இவ்வாறான ஏமாற்று வேலைகள் நடைபெறாது நிறுத்தப்படும். ஏமாற்ற நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகவும் அமையும். லண்டனைப் பொறுத்தவரை ITSO அமைப்புக்கு1 பவுன்களை கொடுத்த யார் வேண்டும் என்றாலும் ரிஷிக்கு எதிராக வழக்கைத் தொடர முடியும்.


அதிர்வு

1 Response to தமிழ் மாணவிகளை வைத்து லண்டனில் பெருந்தொகைப் பணம் கொள்ளை (படங்கள்)

  1. தமிழ் மாணவிகளை வைத்து லண்டனில் பெருந்தொகைப் பணம் கொள்ளை நிச்சயம்
    பொய்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com