ஐரோப்பாவை வாட்டும் கடும் குளிர் நேற்று இத்தாலியில் 17 பேருடைய உயிரை உறைய வைத்து உவிந்தெடுத்துள்ளது. கடந்த 29 வருட வரலாற்றில் இல்லாத மோசமான பனியும், குளிரும் இத்தாலியில் இப்போது கொடுங்கோல் ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கிறது. மோசமான பனிப்பொழிவு காரணமாக தலைநகர் ரோம் பெரும் ஸ்தம்பித நிலையில் கிடக்கிறது. சுமார் 400 வரையான இராணுவத்தினர் ரோமில் இறக்கப்பட்டு பனி வழிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளார்கள். ரோம் மாநகர மேயர் மோசமான பனிக்காலத்தை எதிர் கொண்டு திட்டங்களை உரிய முறையில் வகுக்கவில்லை என்று குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
இது இவ்விதமிருக்க பிலிப்பைன்சின் தலைநகரில் சற்று முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டது. உடனடியாகக் கிடைத்துள்ள தகவல்களில் 43 பேர் மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளைகள் பாடசாலைக்கு போகும் வழியில் இந்த அனர்த்தம் இடம் பெற்ற காரணத்தால் பல பிள்ளைகள் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 6.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வெளி நகரங்களான பிளானஸ், கைகூலன் ஆகிய இரு இடங்களிலும் பலத்த அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. பல கட்டிடங்கள் உடைந்து, பாதைகள் பிளந்து பாரிய அனர்த்தமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மரணத்தொகை போகப்போகவே அதிகரிக்கும் என்பது தெரிந்ததே.



0 Responses to இத்தாலியில் 17 பேர் மரணம் பிலிப்பைன்ஸ் 43 பேர் மரணம்