Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியாவில், இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸாரினால் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

31 வயதான கோகுலவதனி மயூரன் எனும் பெண் கோன்ஹில் பகுதியிலிருந்து ஜனவரி 31 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்திவரும் பொலிஸார், கொலைச் சந்தேகத்தின் பேரில் குளோசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று கைது செய்திருந்தனர். எனினும் பின்னர் அவர் குற்றசாட்டு எதுவும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் இது காணாமல் போன ஒருவர் தொடர்பான விடயம் என நாம் நம்பினோம். அதனால் கைது செய்யப்பட்ட குளோசெஸ்டஷயர் நபர் குற்றச்சாட்டின்றி விடுவிக்கப்பட்டார்' என புலனாய்வு அத்தியடச்கர் சிமோன் எட்கின்ஸன் கூறியுள்ளர்.

இவ்வாறு காணாமல் போன 'கோகுலவதனியின் நலன் குறித்து நாம் தீவிரமாக கரிசனை கொண்டுள்ளோம். அவரை காணும் அல்லது அவரின் இருப்பிடம் தெரிந்த யாராவது எம்முடன் தொடர்புகொள்ளுமாறு கோருகிறோம்' எனவும் அவர் தெரிவித்தார். 5 அடி 4 அங்குல உயரமான கோகுலவதனி திடகாத்திரமான உடலமைப்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பிரித்தானியாவில் தமிழ்ப் பெண் ஒருவரைக் காணவில்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com