Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசை வலியுறுத்தம் விடயத்தில் ஐ.நா செயலர் பான் கீ மூனுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையில் கருத்து ஒருமைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு நாள் உத்தியோகப் பூர்வ பயணமாக இந்தியா சென்ற ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், கடந்த வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா உள்ளிட்டோருடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுக்களின்போது, சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கையை செயற்படுத்தும் விடயத்தில் மன்மோகன்சிங்குக்கும் பான் கீ மூனுக்கும் இடையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவில் உண்மையான நல்லிணக்கப்பாட்டை எட்டுவதற்கு, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என இருதரப்பும் ஒரு இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலருடன் சிறிலங்கா விடயம் குறித்து, எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு சிறிலங்கா அரசுக்கு மனித உரிமைகள் விடயத்தில் மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to மன்மோகன் – ஐ.நா செயலர் இடையே இணக்கப்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com