Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கருணாநிதியின் தமிழீழப் பாசத்தைப் பார்த்து தமிழீழ ஆதர​வாளர்களே கலவரமாகி​ விட்டனர். ஈழத் தமிழர் விவகாரம் சூடு பிடிக்கும்​போதெல்லாம் 'தமிழ் ஈழம்தான் என் லட்சியம்’ என்பார் கருணாநிதி.

சீஸன் முடிந்ததும் அவரும் மறந்து விடுவார். மற்றவர்களும் அவரிடம் அதுபற்றிக் கேட்க மாட்டார்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக தினமும் தமிழ் ஈழ முழக்கம்தான். ஒரு காலத்தில் அவர் நடத்தி வந்த தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு என்று சொல்லப்படும் டெசோ அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கும் அளவுக்கு கருணாநிதி மும்​முரமாக இருப்பதுதான் புதிர்!

''இந்தப் புதுப்பிக்கும் வேலைக்குப் பின்னணியாக இருப்பது கருணாநிதியின் புதுக் கூட்டணிக் கனவு என்கிறார்கள் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கழற்றிவிடும் மன​நிலைக்கு கருணாநிதி வந்து விட்டாராம்.

இலங்கைப் பிரச்னை​யை அதிகமாகக் கையில் எடுத்தால்தான், டெல்லி மேலிடம் கோபிக்கும். அதன் பிறகு கழன்றுகொள்ளலாம் என்பது திட்டமாம். 'அடுத்து வரப்​போகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸுக்குச் சாதகமாக அமையாது. அப்படி இருக்க, அவர்களுடன் நாம் ஏன் இருக்க வேண்டும். நைஸாக நடுவிலேயே வெட்டிக்கொள்வது நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார்.

இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் இருந்து கடைசித் தருணத்தில் கழன்றுகொண்டதற்கும் இது​தான் காரணம். இப்போது தினமும் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசி வருவதற்கும் இதுவேதான் காரணம்!''

''காங்கிரஸைக் கழற்றிவிட்டால் என்னவாகும்..?''
''காங்கிரஸுடன் இருப்பதால்தானே பலரும் கருணாநிதி பக்கம் வரத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டையும் தனது கூட்டணிக்குள் கொண்டுவரலாம்.

அதைவிட வைகோ, விஜயகாந்த் ஆகிய இரண்டு பேரையும் தனது அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை. அப்படி ஓர் அணியைத் தொடங்கினால் மட்டுமே, நாடாளு​மன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மரியாதையைக் காப்பாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

தி.மு.க.வை நோக்கி இவர்களை இழுப்பதற்காகத்தான் தமிழ் ஈழத் தூண்டிலைக் கருணாநிதி வீச ஆரம்பிக்கிறார். அதற்கு முன்னோட்​டமாக, சென்னைக் கொளத்தூரில் அவர் பேச்சிலேயே சில வார்த்தைகள் வந்து விழுந்தன...''

''டெசோவைக் கருணாநிதி ஆரம்பித்த காலத்தில் ஐந்து பேர் அதில் அங்கம் வகித்தார்கள். கருணாநிதி, அன்பழகன், வீரமணி, பழ.நெடு​மாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர். இப்போது, கருணாநிதி அனைவரையும் அழைக்கிறார்.

'இன்னும் யார் யாரை அதிலே இணைத்துக்கொள்ள வேண்டுமோ, அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும்’ என்று கருணாநிதி சொல்லி இருப்பது அரசியல் கூட்டணிக்கான ஒரு முன்னோட்டமாகவே சொல்லப்​படுகிறது!''

நன்றி
ஜூனியர் விகடன்

0 Responses to தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்​பித்து உள்ளாரே... என்ன மேட்டர்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com