தந்தையுடன் சேஜ் ஸ்டாலொன் (சிறுவயது புகைப்படம்)
ஹாலிவூட்டின் முன்னணி நடிகர் சில்வர்ஸ்டோர் ஸ்டாலோனின் மகன் சேஜ் மூன்பிளட் ஸ்டாலோன் நேற்று மர்மமான முறையில் அவரது வீட்டில் மரணமடைந்து கிடந்தது திரையுலகினரை அதிர்ச்சி பெறவைத்துள்ளது.
36 வயதுடைய சேஜ், அவரது அமெரிக்க ஹாலிவூட் நகரில், ஸ்டூடியோ நகரில் உள்ள தனது மாடி வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அங்கு அவர் நல்ல மன நிலையிலிருந்ததாகவும், எந்தவித மன அழுத்தத்தால் பாதிக்கப்படவில்லை எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர் அளவுக்கு மீறிய (போதை) மருந்துகளை உட்கொண்டதே, அவரது மரணத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. அவரது வீட்டிலிருந்து சில மருந்துகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனினும் அவரது உடல் கண்டெடுக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் புதிய சந்தேகம் எழுந்துள்ளது. அளவுக்கு மீறிய மருந்துகளை தற்செயலாக பயன்படுத்தியிருக்கலாம். இது ஒரு விபத்தாகவே நடந்திருக்க வேண்டும் என அவரது நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1990ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய சேஜ் ஸ்டாலோன், தனது தந்தையார் சில்வஸ்டோர் ஸ்டாலோனுடன் இணைந்து 1990 இல் வெளிவந்த ராம்போ - 5, 1996 இல் வெளிவந்த டே லைட் ஆகிய இரு படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும் தற்போது சிறந்த திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். அனைவருடனும் அன்பாக பழககூடிய சேஜ், திடீரென மரணமடைந்தது திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது மகன் பேரிழப்பை தன்னால் தாங்கமுடியவில்லை என சில்வர்ஸ்டோர் ஸ்டாலொன் மனமுருகியுள்ளார்.



0 Responses to சில்வர்ஸ்டோர் ஸ்டாலொன் மகனின் மரணம்: தொடரும் மர்மம்