கடந்த 9ம் திகதி அசாமின் கவுகாத்தியில் மதுபான பாருக்கு வெளியே இளம்பெண் ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே மாநிலத்தில் மீண்டும் இவ்வாறானதொரு சம்பவம் நடதுள்ளது.
அதுவும் இந்த முறை பாலியல் வன்மத்தில் இராணுவத்தினரே ஈடுபட முயற்சித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அசாமில் தொலபா வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் அங்கு விறகு சேகரித்து கொண்டிருந்த இளம்பெண்ணை இவ்வாறு மானபங்கப்படுத்த முயற்சித்துள்ளனர். அப்பெண்ணின் அலறல் சத்தம் கூடி, அயல்வர்களும், கிராமவாசிகளும் குறித்த இடத்துக்கு விரைந்து பெண்ணை மீட்டுள்ளனர்.
அத்துடன் இச்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரை கடுமையாக தாக்கிய கிராமவாசிகள், பின்னர் அவர்களை காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என்பதாலும், தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதாலும், அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து போலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதுடன், இராணுவ வீரர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயன்றதாக அவர்கள் மீது வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். அந்நேரம் அங்கு விறகு சேகரித்துக்கொண்டிருந்த பெண், பட்டம் பெற்ற கல்லூரி மாணவியென தெரிவிக்கப்படுகிறது.
அஸாமில் மீண்டும் ஒரு மானபங்க முயற்சி : இம்முறை ஈடுபட்டது இராணுவ வீரர்கள்
பதிந்தவர்:
தம்பியன்
15 July 2012



0 Responses to அஸாமில் மீண்டும் ஒரு மானபங்க முயற்சி : இம்முறை ஈடுபட்டது இராணுவ வீரர்கள்