கறுப்பு யூலையின் 29ஆம் ஆண்டு நிறைவை நினைவு கூருமுகமாக கனடியத் தமிழர் பேரவையால் கருத்தரங்கொன்று யூலை 23ஆம் நாள் இசுகாபரோ சிவிக் நடுவத்தில் நடத்தப்பட்டது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் இடம்பெறும் நில அபகரிப்பு தொடர்பாக இந்நிகழ்வில் ஆராயப்பட்டது.
என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர், நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனடாக் கிளைத் தலைவர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துள்ளனர்.
நில அபகரிப்புத் தொடர்பாக என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் 'வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் மக்களின் நிலங்களைத் திட்டமிட்டு அபகரித்தல், இராணுவத்தையும் அதன் செயற்பாடுகளையும் அதிகரித்தல், சிங்களமயமாக்கல், பொருளாரதார நெருக்கடிகள், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மறுத்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்தும் பெரிய அளவில் இடம்பெற்று வருகின்றன. சர்வதேச அரசியல் அழுத்தங்கள் சிறி லங்கா அரசுக்குக் கொடுக்கப்பட வேண்டும். உலக நாடுகளின் இத்தகைய மனந்திறந்த செயற்பாடுகள் மட்டுமே சரியான தீர்வுக்கு வழி வகுக்கும்.' எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வழங்கியோரும் தமிழ் பகுதிகளில் தமிழரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பலமிழக்கச் செய்யும் முயற்சியிலும் தமிழ் உறுப்பினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியிலும் சிறி லங்கா அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதைக் குறிப்பிட்டுக்காட்டினர். இச் செயற்பாடுகள் மிக விரைவில் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
தற்போதைய நிலைப்பாடுகளை ஆராய்வதோடு யூலை 83ஆம் ஆண்டுக்குப் பின்னரான 29 ஆண்டுகால தமிழர் மீதான தொடர் அடக்கு முறைகளையும் இனப் படுகொலைகளையும் நினைவுகூருவதோட சரியான தீர்வுக்கான கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என வலியுத்தப்பட்டது.
கறுப்பு யூலை நிகழ்வுகளையும் வடுக்களையும் ஆவணப்படுத்தும் வகையில் கனடியத் தமிழர் பேரவையால் உருவாக்கப்பட இணையத்தளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகளை எடுத்துக் காட்டிய கனடா கறுப்பு ஜூலை நினைவுகூரல்
பதிந்தவர்:
தம்பியன்
25 July 2012



இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடரும் அடக்குமுறைகளை எடுத்துக் காட்டிய கனடா கறுப்பு ஜூலை நினைவுகூரல்; நம் மனிதர்கள் சாரமாக உள்ள பொய் என்று ஒரு உண்மை - புதிய உலக ஒழுங்கு மட்டுமே மனித நாட்டின் ஆன்மீக உண்மையில் ஆழமான புரிதல் வரன்முறை