வெற்றியின் பக்கம் சாயும் சாதாரண மனித குணத்திற்கு அப்பால் தமிழீழ தாகத்துடன் தரணியெங்கும் எழுச்சி கொள்ளும் இளையோர்கள்
ஈழத் தமிழினத்தின் நீதியை நிலைநாட்ட லண்டன் மாநகரில் மீண்டும் அறப்போர் புரியும் சகோதரன் சிவந்தனுக்கு ஆதரவு தெரிவித்து யேர்மனி இளையோர்கள் தமது எண்ணங்களை இங்கே பதிவு செய்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளையோர்களின் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு என்றும் முதன்மை வகித்தது யாவரும் அறிந்தது.
வெற்றியின் பக்கம் சாயும் சாதாரண மனித குணத்திற்கு அப்பால் இன்றைய நிலையில் சில பின்னடைவை நாம் சந்தித்தாலும் அஞ்சாமல் எதற்கும் சவாலாக நிற்கும் எமது இளையோர்கள் என்றோ ஒருநாள் தமிழீழம் மலரும் என்பதை இன்றே தமது செயற்பாட்டின் ஊடாக உறுதியளிக்கின்றார்கள். தினமும் அறிக்கைகளில் மட்டும் போராட்டம் நடத்தும் சில அமைப்புகளை தாண்டி எமது தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய சொல்லுக்கு முன் செயலில் மீண்டும் மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் இளையோர்கள் முன்னால் தலைவணங்குகின்றோம்.



0 Responses to மக்களை எழுச்சி கொள்ள வைக்கும் இளையோர்கள் (காணொளி இணைப்பு)