Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழம் தொடர்பான கருத்தில் தான் எப்போதும் ஒரே நிலையில் இருப்பதாகவும், தான் எதுவும் குழப்பவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ் ஈழம் என்ற குறிக்கோளை திமுக கைவிட்டதாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் நான் திட்டவட்டமாகத் தெரிவித்தேன்.

ஆனால் தெளிவாக நான் அளித்த பேட்டியை குழப்பம் என்று சில நண்பர்கள் குதர்க்க வாதம் செய்கின்றனர். ஈழ கோரிக்கையை திமுக கைவிட்டு விட்டது என்பதைப் போல பேசுவதையும், எழுதுவதையும் காணும்போது, திமுக எந்தக் கருத்தை மக்கள் முன்னால் எடுத்து வைத்தாலும், அதற்கு மாறுபட்ட கருத்தைச் சொல்லி குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

தமிழ் ஈழம் வேண்டும், அதுவும் இன்றைக்கே வேண்டும், அதற்கு ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால், உடனே, இலங்கைத் தமிழர்கள் அடிபட்டு சாக வேண்டியிருக்கிறது. அவர்களின் அழிவுக்கு கருணாநிதிதான் காரணம் என்பர்.

முதலில் இலங்கைத் தமிழர்களின் இப்போதைய துன்பங்கள் தீர வேண்டுமென்றும், மற்றவற்றைப் பற்றி நேரம் பார்த்துச் சிந்தித்துச் செயல்படலாம் என்றும் சொன்னால், தமிழ் ஈழ கொள்கையை விட்டார் என்பர்.

ஈழத் தமிழர்களின் வாட்டம் போக்குவதற்காக சிந்தித்து செயல்படுத்துவதற்காகத்தான் "டெசோ' மாநாட்டை நடத்துகிறோம்.

அதேவேளையில் இதுவரை என் நிறைவேறாத கனவு தமிழ் ஈழம்தான் என்று முன்பு சொன்னதை எப்போதும் சொல்வேன், இப்போதும் சொல்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to தமிழீழம் தான் கனவு! தான் எதுவும் குழப்பவில்லை என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com