தாயக நினைவுகளின் சங்கமமாக அமையும் கனடியத் தமிழர் வானொலி நடாத்தும் வருடாந்த நட்சத்திர விழாவின் முதல் நாள் நிகழ்வு பல்லாயிரம் மக்களின் வருகையுடன் யூலை 14, சனிக்கிழமை, பிரமாண்டமாக களைகட்டியது. 10801 மக்கோவன்; வீதியில் அமைந்துள்ள மார்க்கம் களியாட்டத்திடலில் நிகழ்வுகள் சனிக்கிழமை ஆரம்பமாகின.
ஒன்ராரியோ, கியூபெக் மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கனடியத் தமிழர்கள் பயணித்து கலந்து கொள்ளும் இந்த திறந்தவெளி இரண்டு நாள் பெருநிகழ்வில் முதல் நாள் நிகழ்வில் பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைதந்த பலரைக் காணக்கூடியதாக இருந்தது. தாயக நினைவுகளை முழுமையாக மீட்கக்கூடியதாக நிகழ்வு அமைவதாக அனைவரும் தெரிவித்தனர்.
நிகழ்வின் நுழைவாயிலில் தாயக தமிழர் கிராமத்தில் தமிழர் வீடு ஒன்றை பிரதிபலிக்கும் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. ஏர், மாட்டுவண்டி, ஓலைக்குடில், கிணறு, பனைமட்டையில் வேலி என நேர்த்தியாக அமைந்துள்ள பாரம்பரிய தமிழர் வீட்டை பார்வையிட்டு தம் சிறார்களுக்கு அதை விளக்கி படம் எடுத்துக் கொள்ள மக்கள் பலரும் முன்டியடித்துக் கொண்டதை நாள் முழுமையாக பார்க்கக்கூடியதாக இருந்தது.
தமிழர் பாராம்பரிய கலை நிகழ்வுகள் மட்டுமன்றி, கிளித்தட்டு, வழுக்குமரம் ஏறுதல், முட்டி உடைத்தல், தலையணைச்சண்டை உட்பட ஆண்கள், பெண்களுக்கான பல போட்டி நிகழ்வுகள், நுங்கு, கருப்ஞ்சாறு, கடலை, சுண்டல் என நிலா வெளிச்சத்தில் தாயக நினைவுகளுடன் தமிழர் நாள் முழுதும் கூடிக்களிக்கும் கோடை நிகழ்வில் முதல் நாளில் முழுமையாக மிகுந்த மகிழ்ச்சியுடன் மக்கள் எங்கும் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
பாடசாலை விடுமுறையில் உள்ள சிறார்களை பெற்றார் கோடையில் அழைத்துச் செல்லும் முதன்மை நிகழ்வாக நட்சத்திர விழா மாறியுதை இம்முறையும் பெரும் அளவில் வந்த சிறுவர்கள் மூலம் காணக்மூடியதாக இருந்தது. சிறுவர்கள், இளையவர்களுக்காக அவர்கள் பயணிக்க அமைந்த பல ரைட்ஸ் கொண்ட விளையாட்டுத்திடல் நிறைந்து வழிந்தது.
ரொரன்ரோ முதன்மை தமிழர் வணிகங்கள் பலவும், சாவடிகளை அங்கு அமைத்ததுடன், மலிவு விற்பனைகளை அள்ளி வழங்கினர். மக்களும் முண்டியடித்துக் கொண்டு வாங்கிக் குவித்தனர்.
கனடிய தமிழர்கள் கனடிய அரசியல் நீரோட்டத்தில் தாக்கம் மிகுந்த ஒரு சக்தியாக மாறியுள்ள நிலையில் முதல் நாளிலேயே கனடாவின் அனைத்து மூன்று பிரதான கட்சிகளின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆளும் கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மார்க் அட்லர், கோர்னலி சோயூ, புதிய சனநாயக்க் கட்சியைச் சேர்ந்த ராதியா சிற்சபையீசன், லிபரல் கட்சியைச் சேர்ந்த யூடி ஸ்கிரோ ஆகியோர் வருகை வந்திருந்னர். இரண்டாம் நாளும் பலர் வரவுள்ளனர்
இந்நிலையில் இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் நிகழ்வில் சனிக்கிழமையிலும் பார்க்க மேலும் பல்லாயிரத்தில் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



0 Responses to பிரமாண்டமாக களைகட்டியுள்ள கனடியத் தமிழர் கோடைகால ஒன்றுகூடல்