Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகை அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்க பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை தொடர்ந்து உபயோகித்தால் நோயை குறைக்க முடியுமே தவிர முற்றிலும் குணப்படுத்த முடியாது.

எனவே, தொடர்ந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. கிருமி தாக்குதலை குறைக்கும் திருவாடா என்ற புதிய மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் 30 ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போராட்டத்தில் ஒரு மைல் கல்லை அடைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எச்.ஐ.வி. தாக்கும் அபாயம் உள்ள மனிதர்களுக்கு இந்த மாத்திரையை கொடுத்தால் நோய் வராமல் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் திருவாடா மாத்திரையை கடந்த 2004ம் ஆண்டு முதலே கைலீடு அறிவியல் ஆராய்ச்சி மையம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to எய்ட்ஸ் நோயை தடுக்கும் மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com