Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரிய தலைநகர் டமாஸ்க்கசில் எதிர்பார்த்தற்கு முன்னதாகவே கடுமையான மோதல்கள் வெடித்துள்ளதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

சற்று முன்னர் தற்கொலைப் போராளி ஒருவர் நடாத்திய தாக்குதலில் இராணுவத்தின் கட்டுப்பாட்டு தளம் எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது, சேத விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

சிரிய அதிபர் ஆஸாட்டின் படைகளும், உலங்கு வானூர்திகளும் வானில் பறந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடாத்திக் கொண்டிருக்கின்றன.

சிரிய இராணுவத்தில் இருந்து விலகிய படைகள் போரில் இறங்கியுள்ளமையே நிலமைகள் சடுதியாக திரும்பக் காரணமாகும்.

தற்போது துருக்கியில் நிலை கொண்டுள்ள ஆஸாட்டின் பாடசாலைத் தோழரும் முன்னாள் படைத்துறை ஜெனரலுமான மனீப் ரால்ஸ் சற்று முன்னர் பீ.பீ.சிக்கு பேட்டி வழங்கியுள்ளார்.

தலை நகரில் சிரிய இராணுவம் நடாத்தப் போகும் கொலைகள் இறுதியில் ஆஸாட்டின் முதுகில் விழுந்து அவரை சர்வதேச போர்க்குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்போகிறது என்று எச்சரித்துள்ளார்.

சிரியாவை விட்டு வெளியேறிய பின்னர் முதற் தடவையாக இவர் வாய் திறந்துள்ளார்.

போராளிகள் பலத்த இழப்புக்களுக்கு மத்தியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள், நகரம் முழுவதுமே புகைக் காண்டமாக எரிந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

போராளிகள் தலை நகரத்திற்குள் நுழைந்து போரை நடாத்துவதானது உளவியல் ரீதியாக அவர்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சிரியாவின் அதிபர் மாளிகை அமைந்திருக்கும் அழகிய மலைப் பிராந்தியத்தை நெருங்கி சண்டைகள் நடக்கின்றன.

சிரிய அதிபரின் படைகள் பலமிக்கவை என்பதால் எந்த நெருக்குதல் வந்தாலும் தலை நகரை விட்டுக் கொடுக்கமாட்டார்கள் என்றும், கடைசி இரசாயன ஆயுதத்தை பாவித்தாகிலும் தலைநகரத்தைப் பாதுகாக்க ஆஸாட் முயல்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

டமாஸ்கஸ் மட்டும் விழுந்துவிட்டால் போர் புதிய பரிமாணம் பெற்றுவிடும் என்று டேனிஸ் படைத்துறை ஆய்வாளர் கூறுகிறார்கள்.

மறுபுறம் சற்று முன்னர் பான் கி மூன் சீன அதிபருடன் பேச்சுக்களை நடாத்தினார், அப்போதும் சீன அதிபர் சிரியாவின் உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது என்றே கூறியுள்ளார்.

மறுபுறம் தற்போது முன்னாள் ஐ.நா செயலர் கொபி அனான் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புற்றினுடன் பேச்சுக்களை நடாத்துகிறார்.

சீனா – ரஸ்யா தக்க வைக்கப்பட தலைநகர் கவிழ்ந்து நிலமை மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது என்றவாறு ஒவ்வொரு வினாடியும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

சீனாவும், ரஸ்யாவும் எதுமே செய்யாமல் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று கூறிக் கொண்டே இருப்பதைப் போன்ற ஏமாற்று வேலை எதுவும் இருக்க முடியாது.

சீனாவும், ரஸ்யாவும் சிரிய அதிபரின் உண்மையான நண்பர்கள் அல்ல என்பது சில தினங்களில் வெளிப்படலாம்.

அலைகள்

0 Responses to சிரிய தலைநகரில் கடும் மோதல் ஆரம்பித்துள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com