Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள இனவெறி அரசின் முழு ஆதரவுடன் இராணுவம், பொலிஸ், மற்றும் சிங்கள காடையர்களால் தமிழ் மக்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகளையும் அதற்கு காரணமானவர்களை வெளியுலகத்திற்கு கொண்டு வரும் நோக்கில் நோர்வே வாழ் தமிழ் இளையோர்களால் துண்டுப் பிரசுரங்கள் விநியோகப்பட்டது.

நோர்வே வாழ் தமிழ் இளையோர்களால் கடந்த 23ஆம் திகதி முதல் 25 வரை, தமிழர்கள் மீது அன்று முதல் இன்றுவரை திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளையும் சட்டத்துக்கு புறம்பான கைதுகள், கலாசார சீர்கேடுகள், கொலைகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் விநியோகிக்கப்பட்டது,

மேலும், விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு என்ற தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைய எம் தேசத்தின் விடுதலைக்காக இளையோராகிய நாம் தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து உறுதியுடன் பயணிப்போம்.

0 Responses to நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை பரப்புரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com