Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உத்திரப் பிரதேசத்தில் அடிக்கல் நாட்ட சோனியா காந்தி சென்றபோது, அங்கு காங்கிரஸ் காரர்களுக்கும், அன்னா ஹசாரே குழுவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

உத்திரப் பிரதேசம் லக்னோவில், தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பனித் தொடங்கவிருப்பதால், அங்கு அடிக்கல் நாட்டித் துவக்கி வைக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்றிருக்கிறார். அங்கு வந்த ஊழல் தடுப்புக் குழுவினர் சோனியா காந்தியைத் அவதூறாக பேசி கோஷமிட்டதாகவும் இதனால் கோபமடைந்த காங்கிரஸ்காரர்கள், ஊழல் தடுப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிரது. பின்னர் காவல்துறையினர் ஈடுபட்டு மோதலை தடுத்து நிறுத்தியதாகவும் உத்திரப் பிரதேசத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜந்தர்மந்திரில் அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் பகுதிக்கு வந்த இளைஞர் காங்கிரஸை சார்ந்தவர்கள் நேற்று கலவரத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத் தக்கது.

0 Responses to சோனியா ஆதரவாளர்களுக்கும், ஹசாரே குழுவினருக்கும் இடையே மோதல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com