பிரான்ஸில் வசிக்கும் ஒரு கலாச்சார குழுவைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான
மக்கள் எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி உலகம் அழிந்து விடும் எனத்
தீவிரமாக நம்புகின்றனர்.
மேலும் இந்த அழிவில் இருந்து தப்பிக்க வழி தென் மேற்கு பிரான்ஸில் உள்ள புகராச் எனும் கிராமத்தில் உள்ள மந்திர மலை ஒன்றுக்குச் செல்வதே எனவும் கூறுகின்றனர்.
அதாவது உலகம் அழிவடையும் போது இம்மலை உச்சியில் வேற்றுக் கிரக வாசிகள் தங்கள் விமானத்தில் வந்து அங்கு கூடியிருக்கும் மக்களை மட்டும் காப்பாற்றுவர் என்பது இவர்கள் எண்ணமாகும்.
இதனையடுத்து இவர்களும் இவர்களைப் பின்பற்றும் ஏனைய மக்களும் அந்தக் கிராமத்துக்குச் செல்ல பிரெஞ்சு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இது குறித்து புகராச் கிராம மேயர் ஜீன் பியெர்ரே டெலோர்ட் கருத்துத் தெரிவிக்கையில் தம்து கிராமத்தில் உள்ள 200 மக்களும் அமைதியாக வாழ்ந்து வருவதாகவும் இன்னும் 6 கிழமைகளில் உலகம் அழிந்து விடும் என்ற பயத்தில் இங்கு குவியவுள்ள 10 000 ஆயிரக் கணக்கான மக்களை சமாளிக்க முடியாது.
மேலும் அவர்களால் இங்குள்ளவர்களின் அமைதி கெடும் எனவும் அறிவித்துள்ளார். டிசம்பர் 21 இற்கு அண்மைய தினங்களில் அதாவது மூன்று நாட்கள் முன்னரும் இரண்டு நாட்கள் அடுத்தும் இக்கிராமத்துக்கு வரும் பாதை மூடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகையில் டிசம்பர் 21 2012 உலகம் அழிகின்றது எனும் தீர்க்கதரிசனம் கடந்த 2000 வருடங்களில் கூறப்பட்ட 183 ஆவது மும்மொழிவு எனத் தெரிவித்தனர். டிசம்பர் 21 மெக்ஸிக்கோவின் பண்டைய மாயன் கலெண்டர் முடிவடைவதால் உலகம் முழுதும் பரவலாக சில மக்களால் உலகம் அன்றைய தினம் அழிந்து விடும் என நம்பப் படுகின்றது.
இது குறித்து மாயன் நம்பிக்கை என்னவென்றால் குறித்த அத்தினத்தில் சூரியக் கதிர்களின் உக்கிரத்தால் அல்லது இன்னொரு கிரகத்துடன் பூமி
மோதுவதால் அழிந்து விடும் என்பதாகும். ஆனால் இந்தப் பிரகடனங்கள் எவற்றுக்கும் உறுதியான அடிப்படை கிடையாது என்பது உற்று நோக்கத்தக்கது.

0 Responses to டிச.21 உலகம் அழியும் என நீங்கள் நம்பினால் பிரான்ஸின் மந்திர மலைக்கு செல்ல அனுமதியில்லை!