Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கரு கலைப்புக்கு மருத்துவர்கள் மறுத்ததால் இறந்து போன இந்திய பெண் சவீதாவின் மரணம் குறித்து அயர்லாந்து அமைச்சரவை இன்று விவாதிக்க உள்ளது.

கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் இன்ஜினியராக உள்ளார். பல் மருத்துவரான சவீதாவுக்கு, கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்கள் வயிற்றில் வளரும் கரு இயல்பான நிலையில் இல்லாததால் வலி ஏற்பட்டுள்ளது என்றனர்.

இதைக் கேட்ட சவீதா, "17 வார கருவில் கோளாறு இருந்தால் கலைத்து விடுங்கள்” என்றார். ஆனால் மருத்துவர்கள் இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு என்பதால் கருவை கலைக்க முடியாது என மறுத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில், சவீதா வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து விட்டது. தொப்புள் கொடி வழியாக, சவீதாவின் ரத்தத்தில் விஷம் பரவியதை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன், சவீதா இறந்து விட்டார்.

கரு கலைப்பு செய்திருந்தால், சவீதா உயிர் பிழைத்திருப்பார் அவரது மரணத்துக்கு மருத்துவர்கள் தான் காரணம் என சவீதா பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது இந்த பிரச்னை பூதாகரமானதையடுத்து, அந்நாட்டு பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது.

"சவீதாவின் மரணத்தை காரணம் காட்டி, நாட்டின் சட்டத்தில் உடனடியாக மாற்றம் செய்ய முடியாது” , அயர்லாந்து பிரதமர் தெரிவித்திருந்தார். கருக்கலைப்பு குறித்த சட்டத்தில் திருத்தம் செய்யும் படி கூறி, நேற்று முன்தினம் டப்ளின் உள்ளிட்ட பல நகரங்களில் ஏராளமானவர்கள் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் ஜேம்ஸ் ரீலி சவீதாவின் இறப்பு குறித்த சுகாதாரத்துறை அறிக்கையை அமைச்சரவை முன் வைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

Indian Woman Force die Irish Envoy Summoned

0 Responses to சவீதா மரணம் குறித்து விவாதிக்க தயாராகும் அயர்லாந்து அமைச்சரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com