யோகா குரு பாபா ராம்தேவின் யோகா பயிற்சி மையங்கள் ரூ.5 கோடி
வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என கூறி மத்திய அரசு தரப்பிலிருந்து
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஹரித்வாரில் அமைந்துள்ள ராம்தேவின் இரு யோகா அமைப்புக்களான பதஞ்சலி யோகா பீடம், மற்றும் திவ்ய யோகா டிரஸ்ட் ஆகியவை மக்களிடம் யோகா கற்றுத்தருவதாக கூறி அதற்கு கட்டணமாக வசூலித்த தொகை ரூ.5.14 கோடிக்கு முறையாக வரி கட்டவில்லை எனவும் இதற்கு விளக்கம் கேட்டே வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் யோகா மையத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே. தீஜரவாலா கூறும் போது, தமது அமைப்பு மருத்துவ சேவை உள்ளிட்ட பொது நல சேவைகளில் ஈடுபட்டு வருவதாக வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கறுப்பு பணத்தை வெளிநாடுகளிலிருந்து மீண்டும் கொண்டுவரவேண்டும் என கூறி அண்மைக்காலமாக மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் யோகா குரு பாபா ராம்தேவ். அவர் தனது யோகா பயிற்சி மையங்கள் மூலமாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதுடன், தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளை வெளிநாடுகளுக்கும், இந்தியாவிலும் விற்பனை செய்து வருகிறார்.
தமது நான்கு பயிற்சி மையங்கள் உட்பட தனது சொத்துக்களின் மொத்த பெறுமதி ரூ.426.19 கோடி எனவும் அண்மையில் அறிவித்திருந்தார்.

0 Responses to ரூ.5கோடிக்கு வரிகட்டவில்லை என பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ்!