Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர் 08, 2012 அன்று பிரான்சின் பாரீஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலை தொடர்பான செயற்பாடுகளை மிகவும் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவரான ‘பருதி‘ என்று அழைக்கப்படும் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் பொறுப்பாளர் திரு. நடராஜா மதீந்திரன் அவர்கள் சென்ற வியாழக்கிழமை, நவம்பர் 08, 2012 அன்று பிரான்சின் பாரீஸ் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி எம்மைத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ தேசிய விடுதலை நோக்கிய செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு கணிசமானது என்பதை முன்னிறுத்தி அவர்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயலாற்றிய இவரின் இழப்பு புலம்பெயர் இளையோருக்குப் பேரிழப்பாகும்.

தமிழீழத்தில் இன அழிப்பினை அரங்கேற்றிவரும் சிங்கள இனவாத அரசானது, தமிழர் தாயகத்தில் தான் புரிந்துவரும் இன அழிப்புக்கு எதிராக புலம்பெயர் நாடுகளில் செயலாற்றிவரும் செயற்பாட்டாளர்கள் மீது தனது குரூரக் கரங்களைத் திருப்பியுள்ளது. சர்வதேசம் வரைக்கும் நீண்டுள்ள இனவெறி அரசின் இக்கொடுஞ்செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பிரான்ஸ் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இப்படுகொலை விசாரணையினை மேற்கொண்டு கொலைக்குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என தமிழ் இளையோர் அமைப்பு - கனடா கேட்டுக்கொள்கின்றது.

சிறிலங்கா அரசின் செயற்பாடுகள் தொடர்பில் நாமனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தாயக விடுதலை நோக்கிய எம் பாதையில் இடறும் தடைகளை முறியடித்து வெற்றிகொள்வோம் என்பதை செயற்பாட்டாளர் பருதி அண்ணா அவர்களின் மீது உறுதியெடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில், தமிழ் இளையோர் அமைப்பு - கனடா ஆகிய நாம், செயற்பாட்டாளர் திரு. பருதி அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 Responses to பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதிக்கு கனடா தமிழ் இளையோர் அமைப்பு வீரவணக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com