Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தனது தென்கிழக்கு ஆசியப் பயணத்தின் இறுதி நாளான நேற்று நவம்பர் 20 ஆம் திகதி கம்போடியாவின் ஃப்னொம் பென்ஹ் இல் இடம்பெற்ற கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்றார்.

இதன்போது அவர் சீனப் பிரதமர் வென் ஜியாபோவையும் ஜப்பானியப் பிரதமர் யோஷிஹிக்கோ நோடாவையும் சந்தித்தார்.

ஒபாமாவின் பதவிக்காலத்தில் இதுவரை வென் ஜியாபோவும் அவரும் 5 தடவை சந்தித்துள்ளனர். இறுதியாக பாலியில் நடைபெற்ற கிழக்காசிய மாநாட்டில் இருவரும் சந்தித்திருந்தனர். இதனை அடுத்து ஒபாமா இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின் முதன்முறை நேற்று சந்தித்தார். உலகின் மிகப்பெரிய பொருளாதார ஸ்திரத் தன்மையுடைய இரு வல்லரசுகளான சீனாவும் அமெரிக்காவும் உலகப் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான மிகப் பெரிய பொறுப்பையுடையன என இச்சந்திப்பின் போது ஒபாமா கூறியுள்ளார்.

இதனையடுத்து வென் ஜியாபோ ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தெரிவானதற்குத் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் சீனா - அமெரிக்க உறவு மேலும் வலுப்பட வேண்டும் எனவும் ஆசிய பசுபிக் வலயத்தில் சமாதானம், ஸ்திரத்தன்மை வளப்பயன்பாடு ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

இதேவேளை இச்சந்திப்பின் போது கிழக்கு சீனக் கடலில் உள்ள diaoyu தீவுகளை உரிமை கொண்டாடும் விவகாரத்தில் டோக்கியோவும் பீஜிங்கும் ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் என ஒபாமா அழுத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to பொருளாதார சமநிலை, ஸ்திரத்தன்மை என்பவற்றில் சீனா, அமெரிக்கா இணைந்து செயற்பட ஆர்வம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com