தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபடுவேன் டேனிஸ் பா.உ முழக்கம்…
தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு இசை வடிவம் கொடுத்து பாடலாக தயாரிக்கப்பட்ட தலைவரின் சிந்தனை இறுவட்டு வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை 17.11.2012 அன்று மாலை பிலுண்ட் நகரத்தில் உள்ள பிலுண்ட் சென்டரில் நடைபெற்றது.
அமைதி வணக்கம், தேசியக் கொடியேற்றல் போன்ற முன் நிகழ்ச்சிகளுடன் மாலை 17.00 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
உரை வடிவில் தவைரால் சொல்லப்பட்ட வாசகங்களுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இசைத்தட்டு வெளியீட்டு முயற்சியில் புதியோர் சாதனையாக இருந்தது.
தமிழீழ இசைக்குழுவால் வெளியிடப்பட்ட இந்த இசைத்தட்டில் தமிழகம், டென்மார்க் உட்பட புலம் பெயர் நாடுகளின் கலைஞர்கள் குரல் கொடுத்திருந்தார்கள்.
வெளியீட்டு ஒருங்கிணைப்பு முயற்சிகளை கலைஞர் செங்கதிர் செய்திருந்தார், விழாவில் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.
டென்மார்க் தமிழீழ ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் திரு. ஜெயரத்தினம் அவர்கள் மங்கள விளக்கேற்றி வாழ்த்துரை வழங்கும்போது தலைவரின் கருத்துக்களுக்கு இசை கொடுக்கப்படும் முயற்சியை பெரிதும் வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.
தாம் இதுவரை இசைத்தட்டை வெளியிடாவிட்டாலும் டென்மார்க்கில் நடைபெறும் இது போன்ற நல்ல முயற்சிகளை தாமாகவே சென்று ஆதரித்து வருவதாகவும் கூறி உற்சாகம் வழங்கினார்.
வயன் கலை இலக்கிய மன்றத்தில் இருந்து தர்மா தர்மகுலசிங்கம் இன்றைய அரசியல் நிலையையும், நிலவும் யதார்த்தங்களையும் சுட்டிக்காட்டி செஞ்சீனம் கூட எம்மை வஞ்சித்ததை நினைக்கும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்று தெரிவித்து முள்ளிவாய்க்கால் அவலங்களை நினைவு கூர்ந்தார்.
நடிகவிநோதன் ரீ. யோகராஜா வாழ்த்துரை வழங்கும்போது செங்கதிரின் குடும்பத்தில் உள்ள பாரம்பரிய இசைக் கலைஞர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் வழியில் இவரும் நல்லதோர் இசைப்பணியை இந்த இசைத்தட்டு வழியாக ஆற்றியுள்ளதாக தெரிவித்தார்.
இசைத்தட்டு பற்றிய விமர்சன உரையை ஆற்றிய ஆசிரியர் கி.செ.துரை, கவிதைக்கு இசையமைப்பது சாதாரணமாக நடப்பது, ஆனால் உரைக்கு இசை கொடுப்பது சாதாரண விடயமல்ல இந்த இசைத்தட்டு முதற் தடவையாக அந்த விஷப்பரீட்சையைத் துணிந்து தொட்டிருக்கிறது என்றார்.
தாளம், காலம், சுருதி பிசகாமல், தலைவரின் உரையை அளவான இடங்களில் நிறுத்தி, பொருள் குலையாமல் பாடுவது கடினமான பணி அதை பாடகர்கள் சிறப்பாக செய்துள்ளார்கள்.
வாசிக்க நேரமில்லாத புலம் பெயர் சமுதாயத்தில் தலைவரின் சிந்தனைகளை இசைபாடல்களாக வழங்குவதால் வாகனங்களில் ஓடியபடியே இளைய தலைமுறையினர் அதைக் கேட்டு பயனடைய முடியும்.
நல்ல இசை, நல்ல குரல், நல்ல தொகுப்பாக இதைக் கொண்டுவந்த தமிழீழ இசைக்குழுவினருக்கும், பாடி இசையமைத்த செங்கதிருக்கும், மற்றைய கலைஞர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வயன் நகர பாராளுமன்ற உறுப்பினர் ரோல்ஸ் ராவ்ன் ( சோசல் டெமக்கிரட்டி ) தாம் சமீபத்தில்தான் அமெரிக்கா சென்று வந்துள்ளதாக தெரிவித்தார்.
தாம் சென்ற சமயம் அங்கு சான்டி புயல் வீசியதாகவும், கூடவே அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்ததாகவும் கூறிய அவர், அத்தருணத்திலும் தாம் ஐ.நா சென்று ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான தம்மாலான முயற்சிகளை எடுத்ததாக தெரிவித்தார்.
தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்காக தாம் தொடர்ந்து போராடுவோம் என்று கூறிய அவர் தற்போது ஐ.நா தானே தவறிழைத்துவிட்டதாக வெளியிட்ட அறிக்கை உண்மைக்குக் கிடைத்த வெற்றி என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய செங்கதிர் தலைவரின் கருத்துக்களை ஓரிடத்தில்கூட வெட்டி திருத்தாமல் மாற்றம் செய்யாமல் அனைத்துப் பாடல்களும் நல்ல இசை கலந்து பாடப்பட்டமைக்காக தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
இது கடினமான முயற்சி என்று கூறிய அவர் தமக்கு சகல வழிகளிலும் ஆதரவு தந்த அனைத்துக் கலைஞர்களுக்கும், அவையோருக்கும் நன்றி கூறினார்.
பாடல்களை இசைத்த கலைஞர்களுக்கு ரோல்ஸ் ராவ்ன் பாராட்டுப் பரிசுகளை வழங்கினார்.
இரண்டு பரதநாட்டிய நிகழ்வுகள் நன்றியுரை, இசைத்தட்டு வெளியீடு, கொடியிறக்கம் என்று இரவு எட்டுமணியளவில் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
அலைகள்

0 Responses to தலைவரின் சிந்தனை இறுவட்டு வெளியீட்டு விழா (புகைப்படங்களுடன்)