இந்திய ஊடகங்களில் வெளியாகும் தமிழர்களின் விடுதலைப்
போராட்டங்களுக்கு ஆதரவான திரைப்படங்கள் மற்றும் கட்டுரைகள் இலங்கை
அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் இருட்டடிப்புச் செய்யப்பட்டு
வருகின்றது.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதனால் மக்கள் அடிப்படைச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.
நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சன் தொலைக்காட்சியில் மாலை நேரத்திரைப்படமாக “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படம் ஒளிபரப்பானது. இதனை யாழ்ப்பாணத்தில் பார்க்க முடியாதவாறு கேபிள் நிறுவனம் தடை செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான இடங்களில் கேபிள் தொலைக்காட்சி சேவையை “ஆஸ்க் நெற்வேக்” நிறுவனம் வழங்கி வருகின்றது “ஆஸ்க் நெற்வேக்” இந்த கேபிள் தொலைக்காட்சி சேவையை டான் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வருகின்றது.
குறித்த நிறுவனம் அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் இயங்கிவருவதால், குறித்த திரைப்படம் கேபிள் தொலைக்காட்சியில் தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்திற்கு பதிலாக குறித்த நேரத்தில் “நாடோடி” படம் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர்களின் போராட்ட வாழ்வை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் சன் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப் போவதாக விளம்பரப்படுத்தி இருந்தது. இதனை எதிர்பார்த்து, தமது வீடுகளில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதேபோன்று இந்தியாவில் இருந்து வெளிவருகின்ற ஆனந்தவிகடனில் சன் சி கப்பலில் கனடாவிற்குச் சென்ற ஈழநாதம் பத்திரிகையின் செய்தியாளர் சுரேன் வழங்கிய செவ்வியின் பகுதியும் 2011 ஆண்டு ஆனந்தவிடனின் நீக்கப்பட்டு அரசினால் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படம் இலங்கையில் இருட்டடிப்பு