Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டு விட்டதால் மும்பை தாக்குதல் வழக்கு முடிந்து விட்டதாக மத்திய உள்துறை மந்திரி சுசில்குமார் சிண்டே கூறி இருப்பது வியப்பாக உள்ளது.

தாக்குதலுக்கான சதி திட்டத்தை தீட்டியவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவுகின்றனர். அவர்களை பற்றி வாக்கு மூலம் அளித்த அஜ்மல் கசாப்பை மத்திய அரசு அவசரமாக தூக்கிலிட்டு உள்ளது.

இதற்கு முன் பல தாக்குதல்களை நடத்தி உள்ள லஸ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இயங்கி வருகின்றனர். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த மேற்கொண்ட முயற்சி என்ன?

எய்தவன் இருக்க அம்பை மட்டும் தூக்கில் போடுவதால் எதிர்காலத்தில் தாக்குதல்கள் நிகழாமல் தடுத்திட முடியுமா? குற்ற செயலில் ஈடுபட்டவர்களை தண்டித்து விட்டு அதோடு வழக்கை முடித்து விடுவது சதிகாரர்களை தப்ப விடும் நடவடிக்கை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களாக இருக்கலாம் என்று நீதிபதி ஜெயின் ஆணையத்தால் சுட்டிக் காட்டப்பட்ட சந்திராசாமி, சுப்பிரமணியசாமி போன்றோரை விசாரிக்க மத்திய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.  ஆனால் குற்றச் செயலில் தொடர்பற்றவர்களான முருகன, சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது.

தங்கள் தலைவரை சதித் திட்டம் தீட்டி கொன்றவர்கள் யார் என்பதை விசாரித்து நாட்டிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு காங்கிரஸ்காரர் கூட அக்கறையுடன் குரல் எழுப்பவில்லை.
சதிகாரர்கள் அதிகாரத்துடன் உலவி வருகின்றனர். இப்படி சதிகாரர்களை விட்டு குற்றச் செயலில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டவர்களை தூக்கிவிட்டு கொள்வதால் தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து விடமுடியாது. மரண தண்டனை என்பது மனிதாபிமான மற்ற தண்டனை. இவ்வாறு அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Responses to ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியவர்களை மத்திய அரசு விட்டுவைத்துள்ளது: சீமான் கண்டனம்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com