திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ள திருவரம்பூரில் உள்ள
காந்திநகரில் வசிப்பவர் ராகுல் என்கிற பெயரில் மினரல்வாட்டர் கம்பெனி
நடத்துபவர் சரவணன். 21.11.2012 இவர் காரில் இருந்தபடியே சைனைடு தின்று
தற்கொலை செய்து கொண்டார். இதனை பாய்லர் தொழிற்சாலை போலிஸ்சார் விசாரித்து
வருகிறார்கள். இதற்கு இடையில் இறந்து போன சரவணனின் செல்போனை செக்
பண்ணினதில் இறந்து போவதற்கு முன்பு தனக்கு தானே பேசி பதிவு செய்து வைத்து
உள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நான் இறந்து போவதற்கு
காரணம் கந்துவட்டி கொடுமைதான்... என்று தமிழக முதல்வருக்கு மிகவும்
உருக்கமாக பேசியுள்ளார். அதை அப்படியே தருகிறோம்...
நான்
சாவதே ஒரு ஆளிடம் நான் வாங்கின கடன் தான். என்னை இந்த முடிவுக்கு
தூண்டியது அதிமுக கவுன்சிலர் ஜெரால்டு மில்டன், அலெக்ஸ், வக்கீல் ராஜேஸ்
இவர்கள் எங்களை மிகவும் கொடுமைபடுத்திவிட்டார்கள்.
நாங்க
வாங்கினது என்னமோ 5 இலட்சம் தான் அதுக்காக என் மனைவியை தரக்குறைவாக
திட்டினார்கள். என் மனைவி தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க. அதை
கேள்விப்பட்டவுடனே அலெக்ஸ் வக்கீல் ராஜேஸ்சும் பேசிக்கலாம் சொல்லி என்னை
வரசொன்னாங்க அதுக்கு முன்னாடி ஜெரால்டு எனக்கு போன்பண்ணி நீ வந்துவிடு
என்று மிரட்டினார். நான் திருவரம்பூர் போலிஸில் புகார் கொடுத்து
இருக்கேன்னு சொன்னேன் உடனே ஜெரால்டு கமிஷ்னரா, எனக்கு அவரை தெரியும் அந்த
எஸ்.ஏ கௌரியா அதை உடனே நான் மாத்திடுவேன். நீ வா என்னோட பாடிகார்டு அலெக்ஸ்
வந்து பார்னு சொல்லி என்னை டார்ச்சர் பண்ணினாங்க. நான் போனேன். அங்கே போய்
நான் 5 இலட்சம் தானே வாங்கினேன் என்னிடம் வீடு தோட்டம் கம்பெனி எல்லாம்
இருக்கு நான் இரண்டு மாசம் டைம் கொடுங்க என்று கேட்டேன். அதெல்லாம் உன்னால்
கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க.
நான்
வாங்கின 5 இலட்சத்திற்கு 2 இலட்சம் கொடுத்துவிட்டேன். அதனால் மீதி பணத்தை
இந்த இரண்டு மாதத்தில் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னேன். நீ குடுக்கலனா
உன்னையும் உன் வீட்டில் உள்ள ஆளுங்களா தூக்கிடுவோம். நீ என்னைக்கு
குடுப்பேன் எழுது கொடுன்னு மிரட்டினாங்க நான் முடியாது சொல்லி மறுத்தேன்.
மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் சரவணன்
உடனே
அலெக்ஸ் என்பவன் என் பொண்டாட்டியோட கழுத்தில் கத்தியை வச்சு மிரட்டி
என்னிடமும் என் பொண்டாட்டிகிட்டேயும் மஞ்சள் பேப்பரில் எழுதி கையெழுத்து
கைரேகை வாங்கிட்டாங்க. ஜெரால்டு போனில் பேசி ஒன்று எழுதி வாங்கு இல்லைனா
அறுத்து போட்டுடு இது ஓன்னும் பெரியவிசயமே இல்லை. நான் அதிமுகவில்
இருக்கிறேன் நான் நினைச்சனா என்னவேணும்னாலும் செய்ய முடியும் இந்த புதன்
கிழமைகுள்ள பணம் வரல்லனா என்னோட ஆளுங்க 10பேர் உன் வீட்டுக்கு வருவாங்க உன்
வீட்டில் உள்ள பாத்திரம் பண்டம் எல்லாத்தையும் தூக்கி வெளியே வீசுடுவாங்க.
நீ ஊரில் வாழ முடியாது. ஜெரால்டு தான் கொலை பண்ணும் அவசியம் கிடையாது..
எனக்கா 10 பேர் இருக்காங்க அவுங்க வந்து பண்ணிட்டு போயிடுவாங்க.
இந்த
அலெக்ஸ் போனில் என் பொண்டாட்டி பேரை இழுத்து என்னை அசிங்க அசிங்க திட்டி
நான் தெரியதனமா உங்க கிட்ட பணம் வாங்கிட்டேன் நான் என் வீட்டை வித்து காசை
கொடுத்திடுவேன் என்று எவ்வளவோ கெஞ்சியும் ஜெரால்டு என்னிடம் மேயருக்கு
துணைமேயருக்கு அடுத்த போஸ்டிங்க நான் தான் என்று என்னை மிரட்ட இம்சையை பண்ண
ஆரம்பிச்சாங்க நான் இதுக்கு மேலே இருந்தன்ன? என்னை கொன்னு சின்னபின்னானு
ஆகுறதுக்கு நானே மருந்த குடுச்சு நிம்மதியா செத்துபொயிடுவேன்.
.
அதிமுக கவுன்சிலர் ஜெரால்டு மெல்டன்
அதிமுக கவுன்சிலர் ஜெரால்டு மெல்டன்
அம்மா
தாயே ஜெயலலிதா அம்மா! அம்மா கலெக்டரம்மா என் பொண்டாட்டிய நீ தாம்மா
காப்பத்துன்னும் நான் இல்லன்னா செத்துடுவாமா! நீ தாமா காப்பாத்தனும்.
காவல்துறையே உங்க நம்பிதான் விட்டுவிட்டுபோறேன். நானே இப்ப செத்துகிட்டு
தான் இருக்கேன். அது காரணமே இந்த ஜெரால்டு ஒரு அரக்கன் .இந்த அதிமுக
பதவியில் இருப்பதால் எல்லாத்தையும் மிரட்டி பத்திரத்தை எழுதி
வாங்கிட்டாங்க. கந்துவட்டிக்கு இவுங்க தான். வெத்து பேப்பரில் எழுதி
வாங்கிட்டாங்க. நான் சாகுறேன்.. நான் சாகபோகிறேன். எவ்ளவோ பேர் இந்த
ஜெரால்கிட்ட மாட்டிகிட்டு இருக்காங்க அவுங்க எல்லாத்தையும் காப்பாத்துங்க.
நிறைய பேர் தீக்குளித்து தற்கொலை செய்த இருக்கிறார்கள். அவுங்க
குடும்பத்தையும் காப்பாத்துங்க.
என்னோட
கண்ணையே தானமா யாருக்காவது கொடுத்தீடுங்க நான் காலையிலே கண் பரிசோதனை
மையத்திற்கு போன் பண்ணிகேட்டேன். தற்கொலை செய்து கொள்பவர்கள் இரண்டு
மணிநேரத்திற்குள் கொடுக்க சொன்னாங்க.. அதனால் என்னோட போஸ்மார்டத்தை லேட்
பண்ணிடாதாங்க. நான் சாப்பிடுவது சைனடு.. இதை வேணும்னா நீங்க பாருங்க என்று
காண்பிக்கிறார்..
என்னோட
நிம்மதி போச்சு.. இந்த கந்துவட்டிக்கு நிறைபுரோக்கர்கள் இருக்கிறார்கள்.
இது இப்போது திருச்சியில் தலைவிரித்து ஆடுகிறது.. இது எனக்கு அப்புறம் என்ன
நடக்கபோவதுன்னு எனக்கு தெரியாது.. இதுல்ல இருந்து அவன் ஜெயித்து வந்தா..
பரவாயில்லை.. இதை நான் வெளி உலகத்திற்கு காண்பிக்கனும்..
ஏற்கனவே ஜெயலலிதா அம்மா நீங்க தான் சட்டம் கொண்டு வந்தீங்க ஆனா இந்த அதிகாரிங்க நடவடிக்கை எடுக்கல்லா நல்லா இருங்க எல்லோரும் வாழ்க என்று
முடிகிறது அந்த வாக்குமூலம் இந்த ஜெரால்டு மில்டன் எவ்வளவே
அதிமுககட்சியின் சீனியர் உறுப்பினர் இருந்த போதும் தன்னுடைய பண
செல்வாக்கில் கவுன்சில் போஸ்டின் மாநகராட்சியில் பிளானிங் கமிட்டியில்
உறுப்பனர். இப்போது சமீபத்தில் வெளியான பாண்டியன் ஒளிபெருக்கி
திரைப்படத்தின் கதாநாயகியின் முறைமாமன். அடுத்து காதநாயகனாக நடிக்க கதை
கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இவருடைய
மாமனார் நடிகரும் மாஜிக்நிபுணருமா அலெக்ஸ் இவர் ஆரம்ப காலத்தில்
கந்துவட்டி செய்து கொண்டு இருந்தவர் அந்த தொழிலை அப்படியே விட்டுவிட அதை
அப்படியே தன்னுடைய தொழிலாக தத்து எடுத்துக்கொண்டார்... அலெக்ஸ் இறந்த
பின்பு இந்த கந்துவட்டி கலெக்சன் ஏஜெண்ட் அனைத்தும் இவருடைய வசமானது.
தன் கும்பத்தினருடன் சரவணன்
சரவணனின் மனைவி
சரவணனின் உடல்
0 Responses to மினரல் வாட்டர் கம்பெனி உரிமையாளர் தற்கொலை! தற்கொலைக்கு முன்பு ஜெ.வுக்கு சொன்ன மரண வாக்குமூலம்! (காணொளி இணைப்பு)