தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற
உறுப்பினர்களான சி.சிறீதரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் பாண்டியன் குளம் பிரதேச
சபையின் துணைத்தவிசாளர் செந்தூரன், பாராளுமன்ற உறுப்பினரின் செயளாளர்
பொன்.காந்தன் ஆகியோர் கர்நாடக தலைநகர் பெங்களூரில் கர்நாடக மக்களின் பெரும்
செல்வாக்கு மிகுந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா அவர்களை மரியாதையின்
நிமித்தம் சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் கடந்தகால நிலமைகள் தொடர்பாகவும் தற்போதைய சூழல்கள் தொடர்பாகவும் முதல்வருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் எடுத்து விளக்கினர்.
இந்த விடயங்களை மிகுந்த சிரத்தையுடன் கவனத்தில் எடுத்த எடியூரப்பா, தான் ஈழத்தமிழர்களுக்கு என்றைக்கும் பக்க பலமாக இருப்பேன் என்று உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் பெங்களூர் கர்நாடக மாநில உலகத் தமிழ் பண்பாட்டு அமைப்பின் தலைவர் பக்தவக்சலம், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற தலைவரும் சமூக சேவகருமான எம்.ஜி.ஆர் மணி, தொழில்முனைவரும் உலகத்தமிழ் பண்பாட்டுக்கழகத்தின் கர்நாடக மாநில செயளாளருமான சுந்தரவேல், தொழில் முனைவர் மகேந்திரன், நுண்கலைக் கலைஞர் சிறீதரன், தொழில்முனைவர் வெற்றியாளன் ஆகியோரும் உடனிருந்தனர்.

0 Responses to ஈழத்தமிழர்களுக்கு என்றும் ஆதரவாக இருப்பேன்!- கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உறுதி