யாழ்.குடாநாட்டில் தொடரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் கட்டுப்பாடு
அற்று எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள்
எச்சரித்துள்ளன.
கடந்த தீபாவளியன்று மட்டும் ஒரே பாணியினில் மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காதல் வசப்படுத்தப்படுத்தப்பட்டு இச்சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.வ்பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறுமிகள் 15 முதல் 17 வயதிற்கிடைப்பட்டதாகவேயுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மூன்று சம்பவங்களும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளதாக கூறும் தொடர்புடைய வட்டாரங்கள் எனினும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் செய்த முறைப்பாடுகளையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. குறித்த சிறுமிகள் மூவருமே காதலிப்பதாக கூறி அவர்கள் காதலர்களென அடையாளப்படுத்தப்பட்டவர்களால் அழைத்து செல்லப்பட்டு மதுபானம்; வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டில் எல்லையற்று செல்லும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிருக்கின்ற போதும் சில தரப்புகள் அவை பத்திரிகைகளது மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரங்கள் என தெரிவித்திருந்தன.
சட்டமொழுங்கை பேண இலங்கை சட்டங்கள் தவறிவிட்டமையே இத்தகைய சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரித்து செல்வதை கட்டுப்படுத்தாதிருக்க காரணமென குற்றம் சாட்டப்படுகின்றது.குறிப்பாக குடாநாட்டை சேர்ந்தவர்களிற்கு அப்பால் தென்னிலங்கையினை சேர்ந்தவர்களும் இக்குற்றச்சம்பவங்களின் பின்னணியினிலிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
குறிப்பாக வீதி நிர்மாண வேலைகள் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களுக்கென பெருமளவில் தெற்கிலிருந்து இளம் சமூகத்தினர் குடாநாட்டிற்கு தருவிக்கப்பட்டுள்ள நிலையினில் இத்தகைய சம்பவங்கள் கவனத்தினில் கொள்ளப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ்

0 Responses to யாழில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் எல்லை கடந்து செல்கிறது?