Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்றாலும் தனது புன்சிரிப்பாலும் அமைதியான சுபாவத்தினாலும் மக்களை தன்வசம் கவர்ந்து வைத்துக்கொள்ளக்கூடிய திறமையுடைய கேணல் பருதி சிங்கள புலனாய்வாளர்களின் நயவஞ்சக படுகொலைக்கு இலக்காகி பாரிஸில் வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழினவிடுதலையையும். தமிழ்மொழியினை அழியாமல் பார்ப்பதற்குமாக மிகவும் கடினமாக உழைத்தவர் கேணல் பருதி. அதேநேரம் சிங்கள தேசத்தால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பினை வெளிக்கொண்டுவரவும். அதனை தடுப்பதற்காகவும் கடுமையாக உழைத்தார். இளையோரை சரியான முறையில் வழிகாட்டி அவர்களது தனித்துவத்தை வளர்பதற்கும். இன அடையாளத்தை பலப்படுத்துவதற்கும். அரசியல் தெளிவானவர்களாக்கவேண்டுமென்பதிலும் ஆர்வம்மிக்கவராகவிருந்தார்.

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து வந்த அவர் எதிரியின் மிரட்டல்களைப்பார்த்து பயந்ததில்லை. மே 2009 இல் முள்ளிவாய்க்கால் அழிவினைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனச்சோர்வை களைவதற்காக ஓயாது உழைத்துவந்தார்.

எந்தவொரு சந்தர்பத்திலும் அமைதிகாத்தல். தெளிவான சிந்தனை. தொலைநோக்குப்பார்வை. இலட்சியம் தளராத தன்மை போன்ற குணாம்சங்களை தன்னுடன் சேர்ந்திருப்போர் தெரிந்து நடக்கவேண்டுமென விரும்பி வாழ்ந்தார்.
கேணல் பரிதியின் பிரிவால் துயரமுறும் அவரது அன்பு மனைவி,மகள், பெற்றோர், உறவினர்களுடன் நாமும் எமது துயரத்தினை பகிர்ந்துகொள்கின்றோம்.

இம்மாவீரனின் சிந்தனைகளும். ச,யற்பாடுகளும் வெற்றியடையும் வரை தொடர்ந்து மனவுறிதியுடன் உழைப்போமாக.

டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

0 Responses to மக்களின் நண்பன் மாவீரன் கேணல் பருதி – டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com