Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சி.பி.எஸ்.இ., ஒன்பதாம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்தில், ஒரு சமுதாயம் பற்றிய கருத்துக்களால் சர்ச்சைக்கு ஏற்பட்டுள்ளது. "இப்பாடத்தை நீக்க வேண்டும்' என, ம.தி.மு.க., சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வைகோவுக்கும், கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் கருத்து வேறுபாடு வலுத்து வரும் நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு முன், சம்பத்தின் சொந்த ஊரான வேர்கிளம்பியில், அவரது உருவ பொம்மையை, ம.தி.மு.க., வினர் எரித்தனர்.

இதுகுறித்து நாஞ்சில் சம்பத், ‘’சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுவதற்காக, இந்த நாடகம் நடத்தியுள்ளனர். இதன் மூலம் யாருக்காவது மகிழ்ச்சி கிடைத்தால், எனக்கும் மகிழ்ச்சிதான்.

புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க., வில் கொள்கை பிடிப்புடன் இருந்ததால், முதலில் கைது செய்யப்பட்டேன். நிர்வாகத்தில் தலையிட்டதில்லை; சிபாரிசு செய்தததில்லை.

சொந்த ஊர் செல்வாக்கு பற்றி கலிங்கப்பட்டியில் விசாரித்தால் தெரியும். அரசியலில் இல்லாமலும் என்னால் சுடர் விடமுடியும்.

எனது இல்ல திருமணத்துக்கு வருமாறு, நான் வைகோவை நேரில் அழைத்திருந்தேன். இந்த நிலைமைக்கு பின், அவர் திருமண விழாவில் பங்கேற்க வேண்டாம் என, வேண்டுகோள் விடுக்கிறேன்’’என்று கூறினார்.

0 Responses to என் இல்லத்திருமணத்திற்கு வைகோ வரவேண்டாம்: நாஞ்சில் சம்பத்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com