அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 ஆவது முறையாக பாரக் ஒபாமா வெற்றி பெற்றது அனைவரும் அறிந்த விடயம்.
வரும் ஜனவரியில் ஒபாமா பதவியேற்க உள்ள நிலையில், ஹிலாரி கிளிங்டன் தனது வெளிவிவகார அமைச்சு பதவியிலிருந்து நீங்கவுள்ளார் என்பது சிறிது அதிர்ச்சியான செய்தி ஆகும்.
ஆனால் இம்முடிவுக்கு அரசியல் காரணமல்ல. ஹிலாரி கிளிங்டன் 2 ஆவது முறையும் வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகிக்க விரும்பாததே இதற்குக் காரணம் ஆகும். அமெரிக்காவில் ஜனாதிபதி பதவிக்கு அடுத்து மிக முக்கியமான பதவி வெளியுறவுத்துறை அமைச்சே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிபர் பதவியேற்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் தற்போதுள்ள அமைச்சுக்களும் மாற்றியமைக்கப் படவுள்ளன. மேலும் ஹிலாரி பதவி விலகுவதை அடுத்து அவர் வகித்த பதவிக்கு அதிபர் தேர்தலைப் போலவே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. போட்டியிடும் இரு முக்கியமான நபர்களும் வெளி விவகார குழுவின் தலைவர் ஜோன் கெர்ரி மற்றும் அமெரிக்காவின் ஐ.நா இற்கான தூதுவர் சூசன் ரைசும் ஆவார்கள். இதில் ஜோன் கெர்ரி வெற்றி பெறுவார் என பெரும்பாலானோர் எதிர் பார்க்கின்றனர்,
65 வயதாகும் ஹிலாரி கிளிங்டன் 2016 இல் இடம்பெறவுள்ள அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ளார் எனவும் சில அமெரிக்க ஊடகங்கள் ஊகம் தெரிவித்துள்ளன. இதேவேளை சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு கடும் போட்டி கொடுத்த 'மிட் ரூம்னி' ஒபாமா தலைமையிலான அரசவையில் தானும் பங்கேற்க விரும்புவதாக ஊடகங்களுக்குக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒபாமா வென்ற போதும் ஹிலாரி கிளிங்டன் பதவி விலகல்