Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காங்கிரஸ் அரசுக்கு எதிராக, எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மமதா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சித்துவருகிறது.

எனினும் இந்நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறாது என எதிர்வுகூறி இடதுசாரிகள், கம்யூனிஸ்டுக்கள் தமது ஆதரவை தர மறுத்துவிட்டன. எனினும் பாஜகவுடன் மமதா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் போது, மத்திய அரசின் சில்லறை வணிக்த்தின் அன்னிய முதலீடு கொள்கையை எதிர்ப்பதற்கே அதிமுக தலைமையிலான தமிழக அரசும் திட்டமிட்டுள்ளது.

சென்னை கோட்டையில்  இன்று முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து எம்.பி.க்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

பின்னர் முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறியதாவது: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நாங்கள் ஏற்கனவே எதிர்த்து வருகிறோம். இதுகுறித்து ஏற்கனவே நான் விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவாக கூறியிருக்கிறோம்.

பாராளுமன்றத்தில், அன்னிய முதலீடு குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அ.தி.மு.க. எதிர்த்து வாக்களிக்கும். மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக எந்த கட்சியும் எங்களை அணுகவில்லை.  அவ்வாறு தீர்மானம் கொண்டு வரப்பட்டபிறகு அது வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்து எங்கள் நிலையை முடிவு செய்வோம் என்றார்.

0 Responses to நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எக்கட்சியும் எம்மை அணுகவில்லை: தமிழக முதல்வர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com