ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராக தெரிவான பின் மேற்கொண்ட தனது முதலாவது
ஆசிய விஜயத்தில் சில முக்கிய தலைவர்களைச் சந்தித்தது மட்டுமல்லாமல்
அவர்களுடன் உணர்ச்சி மிக்க தருணங்களைப் பரிமாறியிருந்தார்.
சாதாரணமாக ஒபாமா பொது மேடைகளில் தனது மனைவியான மிச்செலுடன் காட்டும் அன்பு வெளிப்பாட்டை போன்று சற்று வித்தியாசமாகவே தென் கிழக்காசிய தலைவர்களிடம் காட்டியுள்ளார்.
அதாவது இந்த ஆசிய விஜயத்தில் ஒபாமாவின் உடல் மொழி நன்கு தேறியிருப்பதாகவும் மற்றைய அரசியல் தலைவர்கள் அவரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வஞ்சப்புகழ்ச்சியாக கூறியுள்ளன.
ஞாயிற்றுக் கிழமை தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அரச கட்டடத்தில் பிரதமர் ஷினவத்ராவுடன் இரவு உணவு விருந்தில் பங்கேற்ற ஒபாமா மிக நீண்ட நேரம் அவருடன் கை குலுக்கி சிரித்துப் பேசியிருந்தார். மேலும் திங்கட்கிழமை மியான்மார் எதிர்க்கட்சித் தலைவியுடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பின் பொது மேடையில் ஆங் சாங் சூ கியின் கன்னத்தில் முத்தமிட்டும் தனது அன்பு வெளிப்பாட்டைக் காட்டியிருந்தார்.
இந்த உணர்ச்சி மிக்க தருணங்களின் புகைப் படங்கள் மேற்குலக ஊடகங்கள் பலவற்றில் பிரசுரமாகியுள்ளதுடன் ஒபாமாவின் அன்பு வெளிப்பாட்டை பற்றி அதிகமாக பேசியுள்ளன.

0 Responses to தென் கிழக்காசிய சுற்றுப்பயணத்தில் ஒபாமாவின் 'உணர்ச்சிகரமான' தருணங்கள்!