Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கு அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

அதன் பிரகாரம், மேல் மாகாண முதலமைச்சரான பிரசன்ன ரணதுங்கவும், தென் மாகாண முதலமைச்சராக ஷான் விஜேலால் டி சில்வாவும் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

முதலமைச்சர்களோடு, இரண்டு மாகாண சபைகளுக்கான அமைச்சர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

0 Responses to மேல் மற்றும் தென் மாகாண முதலமைச்சர்கள் பதவியேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com