மலேசிய விமானம் காணாமல் போனதை அடுத்து அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த மாதம் 8ம் திகதி மலேசியாவில் இருந்து சீனாவுக்குப் புறப்பட்ட மலேசிய விமானம், புறப்பட்ட 45 நிமிடங்களில் ரேடார் கருவியின் கட்டுப்பாட்டில் இருந்து மறைந்து காணமல் போனது.
அந்த விமானத்தில் பயணித்த 239 பயணிகளின் நிலை என்னவாயிற்று என்று கவலைக் கொண்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட 15 நாட்களுக்குப் பின்னர், இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் விமானம் விழுந்திருக்கலாம் என்று, ஆஸ்திரேலிய அரசு சிறு ஆதாரத்துடன் தகவல் வெளியிட்டது. இதை அடுத்து அங்கு ஆய்வுகள மேற்கொண்ட பின்னர், விமானம் கடலில் விழுந்துவிட்டது என்றும், பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் மலேசிய அரசு உறுதி செய்தது.
இந்நிலையில் விமானத்தின் கறுப்புப் பெட்டியைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. விமானம் மாயமானதைக் கருத்தில் கொண்டு மலேசிய அரசு புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, விமானத்தினுள் எந்த சூழலிலும் ஒரு விமானி தனித்து இருக்கக் கூடாது, பயணிகளின் உடமைகளை சிறப்பு முறை சோதனை செய்ய வேண்டும், பயணிகளையும் சிறப்பு முறை சோதனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதியக் கட்டுப்பாடுகளை மலேசிய அரசு விதித்துள்ளது.
0 Responses to விமானம் காணாமல் போனதை அடுத்து மலேசிய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது!