யாழ் மாவட்டத்தில் பொலிஸ் சேவைக்காக 600 தமிழ் பெண்களை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசிய போதே யாழ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸார் பற்றக்குறையாக உள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் பொலிஸ் சேவைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே யாழ் மாவட்டத்திலும் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்திற்கு தேவையான 500 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களையும், 100 பெண் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்களையும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to யாழில் பொலிஸ் சேவைக்காக 600 தமிழ் பெண்களை இணைக்கத் தீர்மானம்!