Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினை நிராகரித்த போதிலும், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் பேணப்படும் உறவுகளில் விரிசல் நிலைமை ஏற்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறை மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் இலங்கை முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் சர்வதேசத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையுடன் கூடிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், விசேட விசாரணைக்குழுவொன்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கவுள்ளார்.

0 Responses to ஐக்கிய நாடுகளுடனான உறவில் விரிசல் இல்லை: ஜீ.எல். பீரிஸ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com