மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகளும் புதுச்சேரியில் 83 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு விறுவிறுப்பாகவும் அமைதியாகவும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு விகிதத்துக்கு (72.46 சதவீதம்) ஓரளவு இணையாக இந்த முறையும் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தபால் வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட வேண்டியிருப்பதால் இது 74 சதவீதம் வரை உயரக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
புதுச்சேரியில் 83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் புதுவையில் 79.70 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் வாக்குப்பதிவு 3 சதவீதம் அதிகமாகும்.
சென்னை ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 63.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்திலேயே தருமபுரியில் அதிகபட்சமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்த அளவாக தென் சென்னை தொகுதியில் 57.86 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
வாக்குப்பெட்டிகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு!
வாக்களிப்பு முடிந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குபதிவு தமிழகம் மற்றும் புதுவையோடு சேர்த்து மொத்தம் 12 மாநிலங்களில் நடைப்பெற்றது. ஜார்கண்ட், அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் ஒரு சில அசம்பாவிதம் நடைப்பெற்றது. மற்றபடி வாக்குப்பதிவு மிக அமைதியாகவே நடைபெற்று முடிந்த நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள வாக்கு என்னும் மையங்களில் வைக்கப்பட்டு, அவைகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முதல் அடுக்குப் பாதுகாப்பில் பாதுகாப்புப் படை வீரர்கள், இரண்டாம் அடுக்குப் பாதுகாப்பில் ஆயுதப்படை வீரர்கள், மூன்றாம் அடுக்குப் பாதுகாப்பில் உள்ளூர் போலீசார் என்று 3 அடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழகத்தில் 72.8% வீத வாக்குப் பதிவு, புதுச்சேரி 83% வீத வாக்குப் பதிவு!