Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியின் மசூத்பூர் பகுதியில் பல ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டக் குடிசைகள் உள்ளன. இங்கு இன்று காலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இப்போது கொளுத்தும் வெயில்காலம் என்பதால் தீ மள மளவென்று அடுத்தடுத்த குடிசைகளுக்கு பரவி, ஆயிரத்து 200க்கும் மேற்பட்டக் குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரப்போராட்டத்துக்குப் பிறகு தீயை அணைத்துள்ளனர்.

தீ விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பலத்த பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருட்களின் சேத மதிப்பு இன்னமும் கணக்கிடப்படவில்லை. மத்திய அரசு தரப்பில் இன்னமும் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to டெல்லியில் பயங்கர தீ விபத்து!: குடிசைகள் தீயில் எரிந்து நாசம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com