Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீதிகளையும், கட்டடங்களையும் அமைப்பதில் பலனில்லை. மாறாக, கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதே சமூக முன்னேற்றத்திற்கு உதவும் என்று மேல் மாகாண சபைக்கு தேர்வாகியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

சமூகம், சமயம் உட்பட அனைத்து துறைகளிலும் முன்நிற்கும் சமுதாயத்தை உருவாக்குவதே சிறந்த இலக்குகளை அடைவதற்கான வழி. அதனை நோக்கி முன்னோக்கி பயணிப்பதே தன்னுடைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் கொழும்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை ஹிருணிக்கா பிரேமச்சந்திர பெற்றிருந்தார். அவர், சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகளாவார்.

0 Responses to கட்டடங்களை அமைப்பதில் பலனில்லை; கொள்கை ரீதியிலான மாற்றமே அவசியம்: ஹிருணிக்கா பிரேமசந்திர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com