அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊழல் மிக்க ஆட்சிக்கு எதிராக மக்கள் தமது வாக்கினை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதை நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் உணர்ந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சி ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பு கோட்டையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் முதற் தடவையாக போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி மக்களின் ஆதரவினை பெற்றுள்ளது. இந்த மாகாண சபை தேர்தல் முடிவானது ஊழல், மோசடிமிக்க அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கும் ஆரம்ப நடவடிக்கையாகும். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: சரத் பொன்சேகா