தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அறை தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவைக்கானத் தேர்தல் நடைபெற்று வருகிறது. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முதலமைச்சர் ஜெயலலிதா, நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தனர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில், கருணாநிதி, தயாளு அம்மாள், தயாநிதி மாறன், ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தமிழரசு உள்ளிட்டவர்கள் வாக்களித்தனர். ஆழ்வார்ப்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன் வாக்களித்தார். நடிகர் அஜீத் தமது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார்.
இப்படித் தமிழகம் எங்கும் மிக அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக சென்னை தலைமை செயலகத்தில் இயங்கும் தேர்தல் கண்காணிப்பு அறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கண்காணிப்பு அறையில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம். இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 30 பணியாளர்கள் கொண்டு இந்த கண்காணிப்பு அறை செயற்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அதிகாரிகளின் தொலை பேசி எண்களைப் பதிவு செய்துக் கொண்டு, அந்த தொலைபேசியில் வரும் குறுந்தகவல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்படியாக இந்த கண்காணிப்பு அறை செயல்ப்படுகிறது.
அந்த அதிகாரியின் கைபேசியில் இருந்து PL என்று தகவல் வந்தால் பிரச்சினை என்று அர்த்தம். கட்டுப்பாட்டு அறையிலிருந்து என்ன பிரச்சினை என்று கேட்டு அதை சரி செய்வதற்கான வழிமுறைகள் கையாளப்படும். அதிகாரியின் கைப்பேசியிலிருந்து PS என்று தகவல் வந்தால் பிரச்சினை தீர்க்கப்பட்டது என்று அர்த்தம். இப்படியாக கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் வக்குச்சாவடியுடன் இணைந்திருக்கின்றன என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தமிழகம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு!: கண்காணிப்பு அறைத் தகவல்