இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களை அழைத்து வந்து உடலுறுப்பு மாற்று உள்ளிட்ட உடலுறுப்பு கடத்தல் வியாபாரம் இடம்பெறுகின்றமை தொடர்பில் விசாரிப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து இலங்கை வரவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி கொழும்பில், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஹைதராபாத் பொலிஸ் ஆணையாளர் அனுராக் ஷர்மா கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
தினேஷ் குமார் மாரு என்ற இளைஞரை, அவரது சிறுநீரகத்தை விற்கும் நோக்கில் இலங்கைக்கு அனுப்ப உள்நாட்டுத் தரகர்களாக செயற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராக் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.
www.ineedakidneynow.org மற்றும் www.experienceproject.com ஆகிய இணையத்தளங்கள் ஊடாக, சிறுநீரகங்களை வழங்கும் எதிர்பார்ப்பில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை சேகரித்த இவர்கள், இலங்கையின் வைத்தியர்களை தரகர்கள் ஊடாக தொடர்பு கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சத்திர சிகிச்சை இலங்கையில் பிரதானமாக தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசேட குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி விசாரணைகளை மேற்கொள்ளும் அதேவேளை, மனித உடல் உறுப்புக்களை விற்பனை செய்யும் இந்த வியாபாரம் தொடர்பில் இந்தியாவிலும் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அனுராக் ஷர்மா தெரிவித்துள்ளார்.
பணத்திற்கு சிறுநீரகத்தை விற்பனை செய்வது இந்தியாவின் சட்டத்தின் படி தடையாகும். இதேவேளை, ஹைதராபாத் பொலிஸார், விசாரணைகளுக்கு இலங்கையின் ஒத்துழைப்பைக் கோரினால், தாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். எனினும், இதுவரை அவ்வாறான ஒரு வேண்டுகோள் விடுக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சொந்த விருப்பத்தின் பேரில் எவராவது ஒருவர் சிறுநீரகத்தை வழங்க முன்வந்தால், அதற்கு எதிராக இலங்கையின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனாலும், சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் போது ஏதாவது விபரீதம் ஏற்படுமாயின் அதனை மேற்கொண்ட மருத்துவ குழுவிற்கு எதிராக இலங்கையின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to உடலுறுப்புக்கள் கடத்தல்; விசாரணைகளுக்காக இந்தியப் பொலிஸார் இலங்கை வருகின்றனர்!