சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் நாடும் (இலங்கை), மக்களும் முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ளாதவர்களே இலங்கைக்கு எதிராக சதி செய்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
எமக்கு எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், வெற்றிகொண்ட சுதந்திரத்தை பின்னுக்குத் தள்ள இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கும், பிள்ளைகளுக்கும் நாம் சுதந்திரத்தையும் அமைதியையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். பயம் சந்தேகமின்றி கல்வி கற்கும் சூழலை நாடெங்கிலும் ஏற்படுத்தியுள்ளோம். எங்கும் எவரும் சுதந்திரமாக பயணிக்கவும், அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக தமது சமயங்களை வழிபடவும் நாம் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கையின் முன்னேற்றத்தை பொறுக்க முடியாதவர்களே சதி செய்கின்றனர்: மஹிந்த