Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எனது மகனது வாழ்க்கையை அரசியலாக்க வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்குவேன் என்று கடந்த 18ம் திகதி நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில் சதாசிவம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சதாசிவம் பேட்டி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட இருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்தில் ஏற்படுத்துமோ? என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், எனது மகனுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு வந்தவுடன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

அப்போது 23 ஆண்டுகள் நான் அனுபவித்து வந்த வேதனை ஒரு நொடியில் மறைந்து போனது, ஆனால் எனது மகன் விடுதலையாகும் நாளை நாங்கள் எண்ணி கொண்டிருக்கும் வேளையில், விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுவது போன்று கருணாநிதி கருத்து தெரிவித்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

எங்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள், என்னையும், எனது மகன் பேரறிவாளனையும் விட்டுவிடுங்கள், நாங்கள் எங்கேயாவது சென்று பிழைத்து கொள்கிறோம்.

மேலும் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஊர் ஊராக சென்று அவர்கள் நிரபராதிகள் என்று ஓயாமல் போராடி, அதன்விளைவாக இன்றைக்கு எஞ்சிய வாழ்கையாவது அவர்களுக்கு கிடைத்துவிடும் என்ற மிகுந்த நம்பிக்கையோடு இருக்கும் இந்த வேளையில் எங்களின் இதயங்களில் ஈட்டி பாய்ச்சுவது போல் அமைந்துவிட்டது.

23 ஆண்டுகள் மனவலி என்ன என்பதை ஒரு தாயின் இடத்தில் இருந்து தயவு செய்து யோசித்து பார்க்க வேண்டும். எப்படியும், எனது மகன் உள்ளிட்டோருக்கு நியாயம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நிறைவேறிய வேளையில், இப்படி ஒரு கருத்தை பரப்புவது எங்களுக்கு கிடைத்த நீதியை பறித்தது போல் இருந்தது.

நான் வேண்டி கேட்டுகொள்வது எல்லாம், இந்த வழக்கில் இதுவரை மறுக்கப்பட்ட உரிய நீதி கிடைக்கும் வரை, அதனை பாதிக்க செய்யும் எவ்வித அரசியல் கருத்துக்களையும், வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.

0 Responses to பேரறிவாளன் வாழ்க்கையை அரசியலாக்க வேண்டாம்: கண்ணீருடன் அற்புதம்மாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com