மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் வரை தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடுவார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் எண்ணம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றிடம் பேசும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பமாக உள்ளது. அதனால் தான் மோதல்கள் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் இன்றும் வடக்கில் இருந்து இராணுவத்தை அரசாங்கம் வெளியேற்றாமல் வைத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோட, தமிழ் மக்களை தொடர்ந்தும் அடக்கி வைப்பதற்காக அரசாங்கம் வித்தியாசமாக காரணங்களை சொல்லி வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகவோ, பரவவோ எந்தவொரு சாத்தியமும் இல்லை. வடக்கில் இருந்து 70 முகாம்கள் அளவில் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால், அகற்றப்பட்ட சிறிய முகாம்கள் அனைத்தும் இன்று பெரிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் இருந்த இராணுவத்தையும் இன்னும் அகற்றவும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களைப் போலல்ல வடக்கு மாகாணம். வடக்கு இன்று இராணுவத்தின் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இராணுவத்தில் முக்கால்வாசிப் பேர் வடக்கிலேயே உள்ளனர். அவர்களின் ஆக்கிரமிப்பிலேயே தமிழ் மக்கள் வாழவேண்டி ஏற்பட்டுள்ளதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை தமிழ் மக்கள் போராடுவார்கள் - கூட்டமைப்பு