Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று சேலத்தில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர்களை இருட்டில் சென்று சந்திக்கும் வழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது.

தேர்தல் ஆணையத்தின் நல்லெண்ண நடவடிக்கைகளை வரவேற்கும் அதே நேரத்தில் தேர்தல் செலவு குறித்த கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்ய வேண்டும்.

கட்சித் தலைவர்கள் பேசும் கூட்டத்திற்கான செலவை வேட்பாளர்கள் செலவில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈழ விவகாரத்தில் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்ததாக கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்வதால் அது உண்மையாகிவிடாது.

இலங்கைக்கு எதிரான செயல்பாடுகள் மூலம் திரையை மூடிக் கொண்டால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் ஏற்படும் என்றார்.

0 Responses to ஈழத் தமிழருக்கு காங்கிரஸ் துரோகமா?- ஜி.கே.வாசன் மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com