Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் உள்ள நதிகளை இணைத்து தேசிய மயமாக்க வேண்டும் என்று பிரதமருக்கு விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் 70 சதவிகிதம் மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்றாலும், அவர்களுக்குப் போதுமான நீர் ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது என்றும், இதனால் தொழில்கள் நலிவடைந்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழகத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் பலன் பெறும் வகையில் தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to நதிகளை தேசிய மயமாக்க வேண்டும்!:விஜயகாந்த் கோரிக்கை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com