இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பிலும், அதன் பிரகாரம் ஐக்கிய நாடுகள் முன்னெடுக்கவுள்ள விசாரணைகள் தொடர்பிலும் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கல்முனையில் இன்று ஆரம்பித்துள்ள இந்தக் கூட்டங்கள் எதிர்வரும் நாட்களில் வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். அப்படியான நிலையில், குறித்த தீர்மானம் தொடர்பில் மக்களுக்கு தெளிவை வழங்கவும், விசாரணைகளின் போது சாட்சியமளிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பிலும் எடுத்துக் கூறுவதே இந்த கூட்டங்களின் முக்கிய நோக்கமென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்களாகின்ற நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களையும், சிலரால் ஏற்படுத்தப்படும் குழப்பங்களையும் நீக்குவதே தமது நோக்கம் என்று பி.பி.சி.யிடம் எம்.ஏ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளார்.
கல்முனையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன். செல்வராசா , பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

0 Responses to ஐ.நா. விசாரணைகளின் போது எவ்வாறு சாட்சியமளிப்பது: கூட்டமைப்பு விளக்கக் கூட்டங்களை நடத்துகிறது!