சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நிகழ்ந்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் முதன் முறையாக அமெரிக்கர் ஒருவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் உறுதி படுத்தியுள்ளது.
சிரியாவின் இட்லிப் நகரில் இராணுவ அணிவகுப்பின் மீது நடத்தப் பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடைய இந்த அமெரிக்கர் பற்றி நுஸ்ரத் தீவிரவாத அமைப்பின் அபு ஹுரைரா அல் அம்ரிக்கி என்பவர் வெளியிட்ட காணொளியில் இருந்து இத்தகவல் வெளியாகியுள்ளது.
இக்காணொளியில் மிக அதிகளவு ஷெல்கள் அடங்கிய டிரக் வண்டியை இட்லிப் பகுதியை நோக்கி இவர் ஓட்டிச் சென்றமை பதிவாகியுள்ளது. இதில் அமெரிக்கராக அடையாளம் காணப்பட்ட மோனெர் மொஹம்மட் அபுசல்ஹா எனும் 22 வயதுடைய நபர் மத்திய கிழக்கு பரம்பரையில் வந்த தென் ஃபுளோரிடாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது. இவர் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட முன்னர் சிரியாவுக்கு பல தடவை பயணித்திருப்பதாகவும் இதனால் இவரது பயணத் திகதி உட்பட ஏனைய விபரங்களைச் சட்டத் துறை பரிசோதித்து வருகின்றது.
மேலும் இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிரிய யுத்தம் ஆரம்பித்தது முதற்கொண்டு அமெரிக்காவில் இருந்து சிரியாவுக்குப் பயணித்த அனைத்துப் பயணிகளினதும் சொந்த விபரங்கள் மற்றும் பயணத்துக்கான காரணங்களை ஆராய FBI போன்ற புலனாய்வு அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளன. மேலும் சிரியாவில் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்க முயன்ற தனது மக்கள் சிலர் மீதும் FBI நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா தனது மண்ணில் தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொண்டு இடம்பெறாமல் தடுக்க முயன்று வருவதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

0 Responses to சிரிய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் அமெரிக்கன் எனத் தகவல்!