இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகள் மற்றும் வரிவிலக்குகளினால் இலங்கையின் வரி வருமானத்தில் பெரும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF: International Monetary Fund) தெரிவித்துள்ளது.
இலங்கையின் 2014ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம் 7.8 ஆக இருக்கும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ள போதிலும், அது 7 வீதமாகவே இருக்க முடியும் என்று எதிர்வுகூறியுள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கையில் வரிவருமானம் குறைந்து காணப்படுகின்றமையே பிரச்சனைக்குரிய விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு, இலங்கை கடன் சுமையை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடுகளின் பொருளாதார நிலை பற்றி ஆராயும் பேச்சுவார்த்தைகளுக்காக அதன் குழுவொன்று கடந்த 10 நாட்களாக இலங்கையில் தங்கியிருந்தது. இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச்சலுகைகளும் வரிவிலக்கு காலங்களும் அளிக்கப்படுகின்றமை மூலம் நாட்டின் வரிவருமானங்கள் இழக்கப்படுகின்றன என்று சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் டொட் ஸ்நைடர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் இலவசக் கல்வியை ஒழித்துவிடுதற்கான இணக்கப்பாட்டை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் முன்வைத்திருந்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்துரைத்துள்ளார்.
கல்வித்துறையில் அரசு கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. கல்வித்துறை பற்றி முடிவுகள் எடுக்கும் நிறுவனம் அல்ல. நாங்கள் பெரும் பொருளாதார கொள்கைகளிலேயே அக்கறை செலுத்துகிறோம் என்று டொட் ஸ்நைடர் குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டில் இலங்கை பொருளாதாரம் பெரும்பாலும் எதிர்பார்ப்புகளைத் தாண்டி வளர்ச்சி கண்டுள்ளதாகவும், அடுத்த கட்ட தவணையும் சாதகமான அறிகுறிகளையே காட்டுவதாகவும், இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொள்ளக்கூடிய சவாலான நெருக்கடிகளில் அமெரிக்க, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமன்றி இலங்கையில் ஏற்படக்கூடிய திடீர் காலநிலை மாற்றங்களும் முக்கியமானவை என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

0 Responses to முதலீட்டாளர்களுக்கு இலங்கை அளிக்கும் வரிச்சலுகைகளினால் பெரும் வருமான இழப்பு: சர்வதேச நாணய நிதியம்!