Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் 31-05-2014 | Raasi Palan 31-05-2014

பதிந்தவர்: தம்பியன் 31 May 2014

மேஷம்
பாராட்டுக்களைப் பெற்று மகிழும் நாள். வியாபாரம், தொழில் அதிக அக்கறை காட்டுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளின் வழியில் உள்ளம் மகிழும் செய்தியன்று வந்து சேரலாம்.

ரிஷபம்
திறமை பளிச்சிடும் நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத்தேடி வரலாம். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம்.

மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். முன்கோபத்தை தவிர்ப்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

கடகம்
மனமாற்றம் ஏற்படும் நாள். தொழில், உத்யோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகும். ஆசைப்பட்ட பொருள் ஒன்றை அதிக விலை கொடுத்து வாங்குவீர்கள்.

சிம்மம்
நிதிப் பற்றாக்குறை அகலும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெளிநாட்டு பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

கன்னி
நினைத்தது நிறைவேறும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் கைக்கூடலாம்.

துலாம்
வரவு திருப்தி தரும் நாள். தொட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். தந்தை வழி உறவினர்கள் தக்க சமயத்தில் கைக்கொடுத்துதவுவர்.

விருச்சகம்
காரிய வெற்றிக்கு கடவுளை வழிபட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும் நாள். தொழில் பணியாளர்களை அனுசரித்துக் செல்வதன் மூலம் அனுகூலம் கிடைக்கும். விரயங்கள் கூடும்.

தனுசு
நீண்ட நாளைய ஆசையன்று நிறைவேறும் நாள். புதிய நபர்களின் அறிமுகம் கிட்டும். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும்.

மகரம்
பொருளாதார விருத்திக்கு வித்திடும் நாள். மறைமுக போட்டிகளைச் சமாளிப்பீர்கள். அக்கம் பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து போகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும்.

கும்பம்
பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம். பரபரப்புடன் செயல்படுவீர்கள்.

மீனம்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைக்கொடுத்து உதவுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். நினைத்ததை நிறைவேற்ற தருணம் பார்த்து காத்திருப்பீர்கள்.

0 Responses to இன்றைய ராசி பலன் 31-05-2014 | Raasi Palan 31-05-2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com